Tuesday, February 15, 2011

பாலகுமாரனுடன் சந்திப்பு

"பாலகுமாரனை சந்தித்தது பற்றி எழுதுகிறேன்" என பதிவுகளில் சில முறை குறிப்பிட்டு கொண்டே இருந்தாலும் இன்று வரை எழுதலை. பதிவர் பலா பட்டறை ஷங்கர் மாதிரி சிலர் , " யோவ் நீ நிஜமா பாத்தியா இல்லியா? " என சட்டையை உலுக்கி கேட்காத குறை தான். பாலகுமாரனை சந்தித்தது ஒரு முறையல்ல, மூன்று முறை; அவற்றை சுவாரஸ்யம் கருதி ரிவர்சில் பகிர்கிறேன்..

மூன்றாவது சந்திப்பு

சென்னை மயிலாப்பூரில் 2006-ல் ஒரு இலக்கிய விழா. திரு. பாண்டிய ராஜன் (Mafoi) அழைப்பில் சென்றிருந்தேன். எனது அடுத்த இருக்கையில் வெள்ளை சட்டை, வேஷ்டியில் பாலகுமாரன். அன்றைய விழாவில் அவர் இறுதியில் யாருக்கோ நினைவு பரிசு தர மட்டுமே மேடை ஏறினார். ரெண்டு மணி நேரத்திற்கும் மேல் அருகிலேயே அமர்ந்துள்ளேன். முதல் முறை மெல்லியதாய் சிரித்ததை தவிர இருவரும் எதுவும் பேசி கொள்ள வில்லை. ரொம்ப நேரம் கழித்து தான் தோன்றியது. ஒரு காலத்தில் ஆதர்சமாய் இருந்த எழுத்தாளர் அருகில், அவரை உரசியவாறு பல மணி நேரம் அமர்ந்தும் சில வார்த்தை கூட பேச தோன்ற வில்லையே ! அப்படி அமர்ந்திருப்பது எந்த மகிழ்ச்சியும், கிளர்ச்சியும் தர வில்லையே! ம்ம்..காலம் எத்தகைய மாற்றங்களையெல்லாம் செய்கிறது !!

இரண்டாவது சந்திப்பு

1995 என நினைவு. எங்கள் ஊர் நீடாமங்கலத்தில் ஒரு மாலை நேரத்தில் வீட்டில் படுத்தவாறே ஏதோ புத்தகம் படித்த படி இருக்க, ஊர் நண்பன் ஒருவன் ஓடி வந்து சொல்கிறான்: " சீக்கிரம்.. கடை தெருவுக்கு வா,, உன்னை பால குமாரன் கூப்பிடுறார்".

" என்னது பாலகுமாரனா? அவர் எப்படி இங்கே?"

"ஆலங்குடி கோயிலுக்கு போயிட்டு வந்தவர் நம்ம ஊரில் டிபன் சாப்பிட நின்னுருக்கார். ஓட்டல் வெளியில் வந்து நின்னவரை நாங்க பாத்து போய் பேசினோம். அப்போ எங்க ஊரில் ஒருத்தர் எழுதின லெட்டர் உங்க புக்கில வந்திருக்குன்னு சொன்னோம். அப்படியான்னு ஆச்சரியமா" அவர் இருக்காரா? பாக்க முடியுமான்னு கேட்டார்".

வீட்டிலிருந்து அந்த ஹோட்டலுக்கு நடந்த மூன்று நிமிடத்தில் முதல் சந்திப்பு ஞாபகத்தில் ஓடியது. என்னை நினைவிருக்குமா?

நீடாமங்கலத்தில் ஓட்டல் வெளியே பாலகுமாரன் நின்றிருந்த காட்சி இன்னும் நினைவில் உள்ளது. சென்று அறிமுக படுத்தி கொண்டேன். என்ன செய்கிறேன் என கேட்டார். பாலகுமாரன் அப்போது விசிறி சாமியார் உள்ளிட்ட ஆன்மீக சமாச்சாரம் நிறைய எழுத ஆரம்பித்து விட்டார். அப்போது எழுதிய சில நாவல்கள் பெயர் சொல்லி வாசித்தீர்களா என்றார். " இல்லை" என்றேன். அவர் முகம் சற்று மாறியது. அவரது நாவல்களில்  பிடித்தது என அவரது மெர்குரி பூக்கள், இரும்பு குதிரை உள்ளிட்ட சில நாவல்கள் பெயர் சொன்னேன். குடும்பத்தார் ஓட்டல் உள்ளிருந்து வந்து காரில் அமர்ந்தனர். பத்து நிமிடம் போல் பேசி விட்டு கிளம்பி விட்டார்.


முதல் சந்திப்பு


கல்லூரி காலத்தில் பாலகுமாரன் ரசிகன் என்பதை விட வெறியன் என்று தான் சொல்ல வேண்டும். பாலகுமாரனை பற்றி யாரும் தவறாக பேசினாலே கோபம் வந்து விடும். வீட்டில் வேறு யாருக்கும் பாலகுமாரன் எழுத்துக்கள் பிடிக்காது. போலவே நெருங்கிய நண்பர்களான நந்து மற்றும் மோகனும் கூட அவரை கிண்டல் செய்து என்னை வெறுப்பேற்றுவார்கள்.

பாலகுமாரன் தொடர்கள் ஒரே நேரத்தில் பாக்யா (மாலை நேரத்து மயக்கம்), சாவி (பந்தய புறா), விகடன் (பயணிகள் கவனிக்கவும்) என வந்து கொண்டிருந்தது. இவை ஒவ்வொன்றையும் வாசித்து விட்டு நான் எழுதிய கடிதங்கள் அந்தந்த புத்தகங்களில் அரை பக்க அளவில் வெளி வந்தன. ஜூனியர் விகடனில் பிரசுரமான " இனிது இனிது காதல் இனிது" தொடர் முடிந்ததும் மூன்று பக்கத்திற்கு ஒரு கடிதம் எழுதினேன். அதற்கு பதில் எழுதிய பாலகுமாரன் " உங்களது இந்த கடிதம் புத்தகத்தில் பிரசுரமாகும். சென்னை வந்தால் போன் செய்து விட்டு வீட்டிற்கு வரவும்" என எழுதி இருந்தார். ரொம்ப மகிழ்ச்சியாக இருந்தது.

சென்னை செல்லும் வாய்ப்பு வந்தது. அப்போது சென்னையில் வேலை செய்து கொண்டிருந்தான் நண்பன் நந்து. தகவல் சொன்னதும் " வா..வா. இந்த தடவையாவது என்னோட தண்ணி அடிப்பியா?"


"மாப்ளே அந்த பேச்சு பேசினே.. உன்னை பாக்கவே வரலை"

" சரிடா. விடு.. எப்ப வர்றே?"

விரைவில் வந்தேன். சென்ற வேலையை விட பாலகுமாரனை சந்திப்பதே முக்கிய வேலையென மனம் சொன்னது.  காலையே பாலகுமாரனுக்கு போன் செய்தேன். அவரது கடிதத்தை நினைவூட்ட, பகல் பதினோரு மணிக்கு வர சொன்னார். நந்துவும் நானும் சென்றோம்.

எங்களை உள்ளே அழைத்து அமர சொன்னவர் "எழுத்தாளனை எதுக்கு பாக்கனும்னு நினைக்கிறீங்க?" என்று பேச ஆரம்பித்தார். நான் சொன்ன பதில்களையும் கூடவே என் மூக்கையும் உடைத்து நொறுக்க ஆரம்பித்தார். சற்று அடி வாங்கியதும் மெள்ள "நீங்க தான் சார் லெட்டரில் "சென்னை வந்தால் போன் செய்து விட்டு வீட்டுக்கு வரவும்'னு எழுதியிருந்தீங்க. நானாக கேட்கலை"

அதன்பின் வேறு விஷயங்களுக்குள் நுழைந்தார். சட்டம் படிப்பதாக அறிந்ததும் அறிவுரை தொடங்கியது. "ஐயருங்க எல்லாம் சூப்பரா இங்கிலிஸ் பேசுவானுங்க. நீயும் இங்கிலிஸ் பேச கத்துக்கோ" நந்து எதுவும் பேசாமல் நாங்கள் இருவரும் பேசுவதை பார்த்து கொண்டிருந்தான்.

பொதுவான விஷயங்கள் பேசும் போது நான் அவரது கதை மாந்தர்கள் அல்லது அவரது கட்டுரையில் "பாலகுமாரனாக" உள்ளவரின் நிலை பாட்டை எடுத்தேன். அவர் அதற்கு நேர் எதிரான நிலைப்பாட்டில் பேசினார். அதிர்ச்சியாக இருந்தது. சாதாரண கதைகள் என்றால் சரி. அவர் அப்போது எழுதியவை எல்லாம் பெரும்பாலும் அவரின் பயோகிராபி தான். கதைகளில் மட்டுமல்ல, அதற்கு முந்தய வாரம் குமுதத்தில் கூட, தான் ஆஸ்பத்திரியில் அட்மிட் ஆன போது முன் பின் தெரியாத அனைவரிடம் எந்த எதிர்பார்ப்பும் இன்றி அன்பு செலுத்தியதாக எழுதி இருந்தார். நேரில் தன் ரசிகன் மீது நேச உணர்வின்றி பேசியது ஜீரணிக்க சிரமமாயிருந்தது.

அவரின் எழுத்தும் அவரும் வேறு வேறாய் இருப்பதாய் நான் சொல்ல, "ஆம் அவையெல்லாம் கதை" என்றார். அப்படியானால் கட்டுரைகள் காட்டிய பால குமாரன்?

ஒரு மணி நேரத்திற்கும் மேல் அவர் இல்லத்தில் அமர்ந்து பேசிய போதும் "தண்ணீர் குடிக்கிறீர்களா? " என்று கூட பேச்சுக்கு  கேட்க வில்லை. பன்னிரண்டு மணி மொட்டை வெயிலில் வெளியே வந்தோம்.

நந்துவிற்கு சிரிப்பு தாளலை. என்னை கிண்டல் செய்து சிரித்தவாறே வந்தான்.

எனது ஆதர்ச எழுத்தாளரின் பிம்பம் ஒரு மணி நேரத்தில் உடைந்து நொறுங்கிய அதிர்ச்சி. கொஞ்சம் கொஞ்சமாய் உள் வாங்கி கொண்டிருந்தேன்.

அந்த சம்பவத்தின் தாக்கத்தை நான் பேசிய அடுத்த ஒரு வரியில் சொல்லி விடலாம். சட்ட கல்லூரியில் நான்கு வருடமாய் படித்தும், அதுவரை எந்த கெட்ட பழக்கமும் இல்லாததால் "பழம்" என்று நண்பர்களால் கிண்டல் செய்யப்பட்டவன், முதன் முறையாய் கேட்டேன்

" மாப்ளே தண்ணி அடிக்கலாமா?"

***

நேற்றைய பதிவுகள்



நாளைய பதிவு: 

ஹைதை ராமோஜி பிலிம் சிட்டி ஏராளமான படம் & வீடியோக்களுடன் 

55 comments:

  1. This comment has been removed by the author.

    ReplyDelete
  2. பாலகுமாரனுக்கும் எனக்குமான பழக்கம் என்பதை விட ஒரு வித நெருக்க்ம இருந்த காலத்தில் புரிதல் இல்லாத ஒரு கணத்தில் பிளவு ஏற்பட்டு, அப்புறம் பேசிக் கொள்வதில்லை. போனவாரம் கூட ஒரே லிப்டில் பயணித்தோம். எனக்கு ஞாபகமிருக்கிறது. அவருக்கில்லையோ.. என்னவோ..:((

    ReplyDelete
  3. பாலகுமாரன் "மேய்ச்சல் மைதானம்" என்றொரு, அவரது படைப்பில் இது குறித்து எழுதி இருந்தார். "என்னை சந்திக்க வரும் வாசகர்களை விட, எனக்கு என் குடும்பம் முக்கியம். வாசகர்களுடன் பேசுவதற்காக என் குடும்பத்தாருடன் இருக்கும் நேரத்தை வீணடிக்க முடியாது" என்றார். பிரபலங்களை சந்திக்க எப்போதும் ப்ரியப்படாமல் இருப்பது. ஏன் எனில் அவர்கள் எந்த விதத்திலும் நம்மை விட உயர்ந்தவர்கள் அல்ல. சில நேரங்களில் அவர்கள் நம்மை விட, தம் எண்ணங்களால் தாழ்ந்து போகிறார்கள்.

    ReplyDelete
  4. நிறைய எதிர்பார்ப்புடன் 'உடையார்' படிக்க ஆரம்பித்திருக்கிறேன் (இப்போ 3-ம் பாகம்) கொஞ்சம் கூறியது கூறல் இருக்கும் போலத் தோன்றியது.

    இப்போ உங்கள் பதிவைப் படித்தேன். Disappointment?

    ReplyDelete
  5. //ஒரு காலத்தில் ஆதர்சமாய் இருந்த எழுத்தாளர் அருகில், அவரை உரசியவாறு பல மணி நேரம் அமர்ந்தும் சில வார்த்தை கூட பேச தோன்ற வில்லையே ! அப்படி அமர்ந்திருப்பது எந்த மகிழ்ச்சியும், கிளர்ச்சியும் தர வில்லையே! //

    இதை படித்தபோது ஏன் என்று எனக்கு மண்டை காய்ந்தது.

    //அவரின் எழுத்தும் அவரும் வேறு வேறாய் இருப்பதாய் நான் சொல்ல, "ஆம் அவையெல்லாம் கதை" என்றார்....ஒரு மணி நேரத்திற்கும் மேல் அவர் இல்லத்தில் அமர்ந்து பேசிய போதும் "தண்ணீர் குடிக்கிறீர்களா? " என்று கூட பேச்சுக்கு கேட்க வில்லை.//

    இதை படித்த பிறகு அவருக்கு அருகில் உட்காருவதை கூட நீங்கள் தவிர்த்திருக்க வேண்டுமோ என எனக்கு படுகிறது.

    ReplyDelete
  6. //பிரபலங்களை சந்திக்க எப்போதும் ப்ரியப்படாமல் இருப்பது//நல்லது.

    தமிழ் உதயம் சொல்லியிருப்பதை வழிமொழிகிறேன்:)!

    ReplyDelete
  7. எல் கே has left a new comment on your post "பாலகுமாரனுடன் சந்திப்பு":

    எழுத்துக்களை வைத்து யாரையும் எடைப் போடக் கூடாது என்பதற்கு நல்ல உதாரணம்

    ReplyDelete
  8. அவரோட புகழ் போதைக்கு நீங்க ஊறுகாய் ஆயிட்டிங்க.

    படிச்ச எனக்கே தாங்கலை. மறக்க ரொம்ப கஷ்டப்பட்டிருப்பிங்க.
    :(

    ReplyDelete
  9. \\ஆதர்சமாய் இருந்த எழுத்தாளர் அருகில், அவரை உரசியவாறு பல மணி நேரம் அமர்ந்தும் சில வார்த்தை கூட பேச தோன்ற வில்லையே \\

    ஏன்னா நீங்களே பெரிய்ய்ய எழுத்தாளர் என்பதால் அப்படியிருக்குமோ:))

    ReplyDelete
  10. This comment has been removed by the author.

    ReplyDelete
  11. நன்றி கேபிள். ம்ம் ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு பீலிங்க்ஸ்
    **
    தமிழ் உதயம் & ராமலட்சுமி : நீங்க சொல்வது சரியே. ஆயினும் இந்த விஷயத்தில் என்னை வர சொன்னதே அவர் தான். கல்லூரியில் படிக்கும் ஒரு இளைஞனுக்கு தன் ஆதர்ச எழுத்தாளர் அவரே பார்க்க கூப்பிடுகிறார் எனும் போது எவ்வளவு ஆசை இருந்திருக்கும். அதனால் தான் வலித்தது
    **
    மாதவி: எழுத்து வேறு. எழுத்தாளர் என்கிற மனிதன் வேறு. நீங்க உடையார் படிங்க. அதில் தெரிந்து கொள்ள நிறைய இருக்கும் அதை மட்டும் எடுத்து கொள்வோம்.
    **
    ஆதி மனிதன் said...
    //இதை படித்த பிறகு அவருக்கு அருகில் உட்காருவதை கூட நீங்கள் தவிர்த்திருக்க வேண்டுமோ என எனக்கு படுகிறது//.
    விடுங்க நண்பா. எனக்கு மேல் டென்ஷன் ஆகுறீங்க. பாத்துட்டு வந்ததும் எனக்கும் இப்படி தான் கோபம் வந்தது. மயிலாப்பூர் ரோடில் சாதாரண (வாழ்கையின் முதல்) பீருக்கே நிறைய "ஏறி போய்" அவரை திட்டிய வரிகளை எழுத்தில் எழுத முடியாது :))

    ReplyDelete
  12. எல். கே & சங்கவி : நன்றி
    **
    வரதராஜலு: அந்த வலி மறக்க ரொம்ப நாள் ஆனது
    **
    வித்யா said:
    //ஏன்னா நீங்களே பெரிய்ய்ய எழுத்தாளர் என்பதால் அப்படியிருக்குமோ:))

    அலோ: அப்ப நான் ஏதும் எழுத ஆரம்பிக்கலைங்க. என்னமா கலாய்க்கிறீங்க.

    ReplyDelete
  13. அருமை மோகன் ஜி! தமிழ் உதயம் சரியா சொல்லி இருக்கார். ஒரு நல்ல படைப்பின் மூலம் நம்மைத்தேடலாம் அதை எழுதியவரை தேடவேண்டிய அவசியம் இல்லை என்பது என் கருத்து.

    நட்சத்திர வாழ்த்துகள்! :))

    ReplyDelete
  14. Its very nice to know about Kumaran Sir... Although I heard about sir from my grandma, I came to know lot from here...

    Thanks for the post.!

    ReplyDelete
  15. சட்ட கல்லூரியின் முதல் நாளில் என்னை நீங்கள் ராக்கிங் செய்த போது, பிடித்த எழுத்தாளர் பாலகுமாரன் என நான் சொன்னேன். நாம் நண்பர்களாக மாறியதற்கு அதுவும் ஒரு காரணம்...நிறைய நேரம் என்னிடம் பாலகுமாரன் பற்றியும் சுஜாதா பற்றியும் நீங்களும் லட்சுமணனும் பேசியது நினைவுக்கு வருகிறது! அதற்கேனும் நான் பாலகுமாரனுக்கு நன்றி சொல்வேன்!

    ஆனால் உங்கள் அனுபவம், "என்ன கொடுமை சார் இது!" ரகம் தான்...

    எழுத்தாளர்கள் பனி கரடிகள் மாதிரி...தூரத்தில் இருந்து ரசிக்கலாம், அருகில் போனால்!?! ? [BTW, Blog writers டால்பின்ஸ் மாதிரி என நீங்கள் சொல்வது காதில் விழுகிறது, அதை நான் ஒப்பு கொள்கிறேன்!]

    ReplyDelete
  16. எனக்கும் இதுபோன்ற பிம்பம் உடையும் அனுபவம் சுஜாதாவை நெல்லையில் ஒரு கூட்டத்தில் சந்தித்தபோது ஏற்பட்டது. அதன்பிறகு இன்றுவரை சுஜாதா என்றால் அந்தச் சம்பவம் மட்டுமே அவரின் படைப்புகளைப் பின்தள்ளி நினைவுக்கு வரும்.

    பிரபலங்களுக்கு சில கட்டாயங்கள்... தூரத்திலிருந்து அவர்கள் எழுத்தை, படைப்பை ரசிக்க மட்டும் செய்வதுதான் நல்லது.

    (இப்பவே சொல்லிக்கிறேன்; நாளைக்கு நானும் பெரிய எழுத்தாளரா/தலைவியா ஆனப்பிறகு இப்படி யாரும் கம்ப்ளெயிண்ட் பண்ணக்கூடாது, ஆமாம்!) :-)))))

    ReplyDelete
  17. எழுத்தாளர்கள் எல்லோரும் எழுத்தும் அவுங்களும் ஒன்றேன்னு இருப்பாங்களா? உள்ளும் புறமும் ஒன்றேன்னு ஆயிரத்தில் ஒன்னு இருந்தால் அதிர்ஷ்டம்.

    இந்த வரிசையில் பிரபலங்களையும் சேர்த்துக்கலாம். கூடியவரை இவர்களை நேரில் சந்திக்காமல் இருந்து நாம் மனசில் போற்றிய பிம்பம் உடையாமல் காப்பாத்திக்கலாம்.

    இன்னும் சில எழுத்தாள நண்பர்களிடம் யதேச்சையா நாம் பேசும் விஷயங்கள் எல்லாம் 'கதை'யா வந்துரும் அபாயமும் இருக்கு.

    ReplyDelete
  18. தொடர்ந்து ஒரு நாலைந்து பதிவு பிரபலமாகி விட்டால் பதிவுலக பிரபலங்களே தலைகீழாக நடக்க ஆரம்பித்து விடுகிறார்கள். பாலகுமாரனுக்கு சொல்லவும் வேண்டுமா..எனக்கும் இந்த அனுபவம் உண்டு.

    ReplyDelete
  19. நாம் அவர்களின் எழுத்தைத்தான் ஒரு பிம்பமாகப் பார்க்கிறோம். அவர்களும் பிம்பமும் ஒரு போதும் ஒத்துப் போவதில்லை.நிறைய பேருடைய அனுபவத்தை அப்படியே எழுதி இருக்கிறிர்கள்.

    ReplyDelete
  20. >>>>>எனது ஆதர்ச எழுத்தாளரின் பிம்பம் ஒரு மணி நேரத்தில் உடைந்து நொறுங்கிய அதிர்ச்சி. கொஞ்சம் கொஞ்சமாய் உள் வாங்கி கொண்டிருந்தேன்.

    எனக்கும் அதிர்ச்சியாகத்தான் உள்ளது.ஆனால் பிரபலங்கள் எல்லாருமே அப்படித்தான். நீங்கல் வெளிப்படயாக சொல்லீட்டீங்க.

    ReplyDelete
  21. இந்தப்பதிவுக்கு டைட்டில் பாலகுமாரன் சாயம் வெளுத்தது என போட்டிருக்கலாம்

    ReplyDelete
  22. இது மாதிரியான விஷயங்கள் நான் எதிர்பார்த்ததுதான். ஆனால் அவரது பல நாவல்களில் ஒன்றிரண்டு விஷயங்கள் நம் வாழ்க்கையில் பின்பற்றக்கூடிய அளவுக்கு தகுதியான விஷயங்களை சொல்லியிருப்பார். அதைப் புரிந்து கொண்டதில் இருந்து எந்த புத்தகம் வாசித்தாலும் ஆயிரம் டன் மணலில் ஒரே ஒரு மில்லி கிராம் தங்கம் இருக்காதா என்ற எதிர்பார்ப்பில் தேடுவதே என் பிழைப்பாகிப் போனது.

    என்னைப் பொறுத்தவரை எழுத்தாளரை அல்லது படைப்பாளியை மற்றும் ஒரு மனிதனாக மட்டும் நினைத்து அந்த படைப்புக்கு மட்டும் முக்கியத்துவம் கொடுத்தால் இது போன்ற ஏமாற்றங்கள் வராது. இந்த கலை காலப்போக்கில் ஒவ்வொருவருக்குமே வசப்பட்டுவிடும். எல்லாம் டீன் ஏஜ் மயக்கம்தானோ என்னவோ.

    ReplyDelete
  23. //என்னைப் பொறுத்தவரை எழுத்தாளரை அல்லது படைப்பாளியை மற்றும் ஒரு மனிதனாக மட்டும் நினைத்து அந்த படைப்புக்கு மட்டும் முக்கியத்துவம் கொடுத்தால் இது போன்ற ஏமாற்றங்கள் வராது. இந்த கலை காலப்போக்கில் ஒவ்வொருவருக்குமே வசப்பட்டுவிடும். எல்லாம் டீன் ஏஜ் மயக்கம்தானோ என்னவோ.//

    உண்மைதான். இந்த பட்டியலில் சினிமாக்காரர்களையும் சேர்த்துக்குங்க.

    ReplyDelete
  24. ஒரு காலத்தில் நான் பாலகுமாரனை தீவிரமாக வாசித்தவன்.. இப்போது?

    ReplyDelete
  25. நன்றி ஷங்கர்.பதிவு எழுதிட்டேன். ஹாப்பியா ?
    **
    பிரணவம் ரவி குமார்: நன்றி. பாலகுமாரனை உங்க பாட்டி மூலம் அறிந்தீர்களா? உங்களுக்கு என்ன வயது நண்பரே ?
    **
    தேவா, நீ சொன்ன சம்பவம் (ராகிங்) நினைவில் இல்லை. ஆச்சரியமா இருக்கு. நாம் நண்பர்களாக சுஜாதா, பாலகுமாரன் போன்றவர்களை இருவரும் ரசித்தது ஓர் காரணம் தான்.

    நிற்க ப்ளாகர்களை ஏன் டால்பின்ஸ் என்கிறாய்? I dont have any clue.
    **

    ReplyDelete
  26. ஹுசைனம்மா: என்னது: சுஜாதாவுடன் இப்படி அனுபவம் கிடைத்ததா? ம்ம்ம் நானும் இந்த அனுபவத்திற்கு பின் எழுத்தாளர்களை பார்ப்பதை தவிர்க்க துவங்கினேன் (உங்கள் கடைசி வரியை ரசித்தேன்)
    **
    துளசி கோபால் said
    //உள்ளும் புறமும் ஒன்றேன்னு ஆயிரத்தில் ஒன்னு இருந்தால் அதிர்ஷ்டம்//.
    //இன்னும் சில எழுத்தாள நண்பர்களிடம் யதேச்சையா நாம் பேசும் விஷயங்கள் எல்லாம் 'கதை'யா வந்துரும் அபாயமும் இருக்கு//.

    உடன் படுகிறேன்
    **
    நன்றி ஜீவன் சிவம்

    ReplyDelete
  27. //நிறைய பேருடைய அனுபவத்தை அப்படியே எழுதி இருக்கிறிர்கள்.//
    நன்றி வல்லிசிம்மன் சார்
    **
    //பிரபலங்கள் எல்லாருமே அப்படித்தான். நீங்கல் வெளிப்படயாக சொல்லீட்டீங்க.//
    நன்றி செந்தில் குமார்
    **
    சரவணன்: நீங்கள் சொல்வது மிக சரி
    **
    துளசி கோபால்: எஸ் மேடம்
    **
    KRP செந்தில் : நீங்களும் நம்மளை மாதிரி தானா? ரைட்டு

    ReplyDelete
  28. போன வாரம் தான் இனிது இனிது வாங்கினேன் . கடிதமும் படித்தேன்... நீங்கள் தான் எழுதியது என்று எதிர்பார்க்கவே இல்லை. அதில் அமுதா பார்மாசி என்றுப் போட்டிருக்கிறதே ? ?

    படித்துப் பார்த்தேன் .எனக்கு என்னவோ பிடிக்கவில்லை. புத்தகத்தைச் சொன்னேன் ...

    ReplyDelete
  29. பிரபலங்களை நாம் தான் அந்த நிலைக்கு ஏற்றிவைத்தோம் என்ற நினைத்துப் பழகினால் ஏமாற்றங்களைத் தவிர்க்கலாம் என்று தோன்றுகிறது. meaning, பிரபலங்களின் 'தொழில்முறை நடத்தை அவர்களுக்கு ஒரு release தானே தவிர அவர்கள் நம்மைப் போல், சில சமயம் நம்மை விட, சாதாரணமானவர்கள்.'

    மேலே மேற்கோளிட்டது, ஒரு சமயம் கமல்காசன் எங்களைக் கூப்பிட்டனுப்பியதை மறந்து குறைவாக நடத்தியதாகப் புலம்பிய போது, எங்களுக்கு ஆளுக்கு ஐம்பது ரூபாய் கொடுத்து சாருஹாசன் சொன்ன விளக்கம். அப்போது புரியவில்லை. பின்னாளில் உண்மையென்றே தோன்றியது.

    வைரமுத்துவின் தொடக்க நாட்களில் ஏற்பட்ட சந்திப்பில் 'ஜன்னல், வியர்வை' என்று அடிக்கடி எழுதுவது உறுத்துகிறது என்று நண்பன் சொன்னபோது, 'செருப்பால் அடிப்பேன்' என்று சொன்னார்.

    இளமையில் எனக்கு நிறைய எழுத்தார்வம் இருந்தது. ஒரே சந்திப்பில் சுஜாதா என் எழுத்தையும் என்னையும் ஒடித்தார். அப்படித்தான் ரொம்ப நாள் நினைத்துக் கொண்டிருந்தேன்; சுஜாதா என்ற எழுத்தாளனைச் சந்திக்கபோனவன் சுஜாதா என்ற எழுத்தாளனை சந்திக்கவில்லை என்பது பின்னாளில் புரிந்தது.

    எழுத்தாளனும் எழுதிய மனிதனும் ஒருவர் தான் என்பது நம் குழப்பமான புரிதல். பிரபலம் என்பது இனிமையான விபத்து - சிக்கியவருக்கு.

    நினைவுகளையும் சிந்தனையையும் கிளறினீர்கள். நட்சத்திர :-) வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  30. மிக அற்புதமான பதிவு. இத்தனை நாள் ஏன் இதை எழுதாமல் விட்டீர்கள்?

    உங்களுடைய அனுபவத்தை அனைவரும் அறிந்து கொள்ள செய்தமைக்கு நன்றி.

    பிரபலங்கள் இப்படித்தான் இருப்பார்கள். ஆனால், உங்களை வரச் சொல்லிவிட்டு அவர் நடந்து கொண்ட விதம் ஏற்றுக் கொள்ள முடியாத ஒன்று.

    அன்று புறக்கணிக்கப் பட்டதால்தான் இன்று நட்சத்திர எழுத்தாளர்.

    ReplyDelete
  31. இன்னொன்றையும் குறிப்பிட வேண்டும். பல வருடங்கள் பொறுத்து ரங்கராஜன் என்கிற தொழில்நுட்ப வல்லுனரை வெளிநாட்டில் சந்தித்த போது கிடைத்த அனுபவம் மிக மிக இனிமையானதாக இருந்தது. எல்லையைக் கடந்து 'படைப்பாளி' சுஜாதாவைப் பற்றியும் பேசினார்.

    பிரபல வட்டத்துக்குள் 'நுழைவோர் ஜாக்கிரதை' என்ற கண்ணுக்குப் புலப்படாத எச்சரிக்கை அறிவிப்பு இருப்பதை உணரவேண்டும் என்று நினைத்தேன் :)

    ReplyDelete
  32. /எனது ஆதர்ச எழுத்தாளரின் பிம்பம் ஒரு மணி நேரத்தில் உடைந்து நொறுங்கிய அதிர்ச்சி. கொஞ்சம் கொஞ்சமாய் உள் வாங்கி கொண்டிருந்தேன்./
    இதைப் படித்ததும் எனக்கும்தான்!

    ReplyDelete
  33. நன்றி ees. ஆம் அந்த கடிதம் நான் எழுதியது தான். அமுதா பார்மசி எங்கள் கடை பெயர். போஸ்ட் மேன் கடைக்கு தான் சீக்கிரம் டெலிவரி செய்வார் என்பதால் அந்த முகவரி தருவேன். கடை இப்போது இல்லை. மலரும் நினைவுகளை கிளறி விட்டீர்கள் நன்றி
    **
    விரிவான இரு அலசலுக்கும் நன்றி அப்பா துரை சார்
    **
    நன்றி அமைதி அப்பா. நட்சத்திரம் ஆகிட்டு எழுதனும்னு தான் வெயிட் செய்தேன் :)) (உண்மையில் கடைசி வரிக்காக தான் வெளியிட தயங்கினேன். ஆனால் அதை சொல்லாவிடில் நான் பொய்யன் ஆவேன்)
    **
    நன்றி அருணா மேடம்.

    ReplyDelete
  34. உங்களிடம் ஒரு மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன் .
    அப்படி பாலா சார் நடந்து கொண்டதுக்கு .
    எழுத்தை நேசிப்பவர் யாரும் எழுத்தாளனை அவ்வளவு தூரம் தொட்டுவிடமுடியது .
    எனது 13 வயதில்அவரின் எழுத்தில் தொடர்ந்த நேசம் இன்னும் பச்சை வயல் மனதை தொடர்கிறது .
    என் 72 வயது அப்பா கிருஷ்ணரை பற்றி எழுதும் பாலாவை பற்றி போனவாரம் கூட சொன்னார்
    எனவே நானும் உங்களை போல ஒரு வாசகன் .
    நமக்கும் எல்லை உண்டு .
    ஆனாலும் இந்த மெயிலில் உங்களின் மன்னிப்பை எனக்கு சொல்வீர்களா ?
    நன்றி
    என்றென்றும் அன்புடன் ,
    சுகி ...

    ReplyDelete
  35. மனம் கணக்கிறது! படைப்புகள்.. படைப்பாளியின் முகம் என எண்ணியிருந்தேன்! முகத்திரை கிழிந்தப் பின், மூடனின் குணம் மறைந்திருப்பதைக் கண்டு, வியந்தேன். விக்கித்தேன். ஊருக்கு உபதேசம் வீட்டுக்கு (?) சே! இலக்கியம் என்பது வெறும் ஏட்டுக்கும் வாசகனுக்கும் மட்டும்தானா? வெட்ககேடு!

    ReplyDelete
  36. கிருஷ்ண மூர்த்தி எதற்கு பெரிய வார்தைகளெல்லாம் பேசுகிறீர்கள். தங்கள் நல்ல மனது புரிகிறது, நன்றி. எல்லாம் நன்மைக்கே. எனக்கு அன்று தான் பாலகுமாரன் மீது இருந்த பைத்தியம் தெளிந்தது. இல்லாவிடில் நானும் இன்னும் கொஞ்ச காலம் அவரின் கதா பாத்திரம் போல் பேசி திரிந்திருக்கலாம். தங்களின் வரிகள் மனதை தொடுகிறது.
    **
    சலீம் பாஷா said //படைப்புகள் படைப்பாளியின் முகம் என எண்ணியிருந்தேன்!//

    இல்லை. ஒவ்வொரு எழுத்தாளரும், தான் எப்படி இருக்க நினைக்கிறார்களோ அதை தான் எழுதுகிறார்கள். எப்படி இருக்கிறார்களோ அதை அல்ல. நன்றி

    ReplyDelete
  37. நீங்க சொல்றதப் பார்த்தா அதிர்ச்சியாத்தான் இருக்கு...!

    ReplyDelete
  38. ம்ம்... சில வருடங்களுக்கு முன்... குமுதம் வெப் வீடியோவில் அவருடைய பேட்டியொன்று பார்த்து எனக்கும் சில விம்பங்கள் தகர்ந்து போயின...முக்கியமாக காஸ்ட் விஷயம்.. ம்ம்.. ஏமாற்றமாக இருந்தது...

    ஆனாலும் அவரின் புத்தகத்திலிருந்து கற்றுக் கொண்டவை வாழ்க்கை முழுவதற்கும் வருபவையாதலால்... அவரையே குருவாகவும் நினைத்துக் கொண்டிருக்கிறேன்..

    ம்ம்... நம்ம பள்ளி ஆசிரியர்கள் வீட்டில எப்டின்னு தெரிஞ்சுக்கிட்டா படிக்கிறோம்...

    ReplyDelete
  39. ஒவ்வொரு எழுத்தாளரும், தான் எப்படி இருக்க நினைக்கிறார்களோ அதை தான் எழுதுகிறார்கள். எப்படி இருக்கிறார்களோ அதை அல்ல. //

    இது நல்ல புரிவு! சொன்ன மாதிரி எவ்வளவு சீக்கிரம் மயக்கம் தெளிகிறதோ அவ்வளவு சீக்கிரம் நமக்கு நாமே விடுதலை கொடுத்துக்கிறோம்.

    இனிமே என்ன ஜமாய்ங்க! :-)

    ReplyDelete
  40. நானும் ஒரு காலத்தில் பாலகுமாரன் ரசிகனாக இருந்தேன். நேரில் எல்லாம் சந்திக்காமலேயே வெளியே வந்து விட்டேன்! அவரின் மிகச் சிறந்த படைப்புகள் மெர்க்குரிப் பூக்கள் மற்றும் இரும்புக்குதிரைகள் என்று எனக்குத் தோன்றும். அப்புறம் அவரின் நடையில் ஓர் மாதிரியான ஓவராப் பேசும் பாத்திரங்கள், மற்றும் அடல்ட்ரி இதைத் தவிர அவர் எழுத்தை சற்று தள்ளி வைக்க வைத்தது அவரின் வாசகர் கடிதங்கள்தான். என் குருவே...நமஸ்காரம் என்றெல்லாம் கடிதங்கள் படித்ததும் அவர் எழுத்துகள் சற்று அன்னியமாகியது. நீண்ட நாட்களுக்குப் பிறகு எல்லோரும் சொல்கிறார்களே என்று உடையார் படித்து வருகிறேன். ஒன்றும் ஓஹோ என்றில்லை என்பது என் அபிப்ராயம். தமிழ் உதயம், அப்பாதுரை கருத்துகளை வழி மொழிகிறேன்.கலகலப்ரியா சொல்வது மிகச் சரி. கண்ணதாசன் கூட ஒருமுறை "என் கவிதைகளைப் பாருங்கள்..என்னை அல்ல.." என்று சொன்னதாகப் படித்திருக்கிறேன். சுஜாதா எழுத்துக்கள் மீது இன்றும் காதல் உண்டு. அவரை நேரில் சந்திக்க வேண்டும் என்ற ஆர்வம் வந்ததில்லை. அவர் காலமானதும் போய்ப் பார்க்கலாமா என்று எழுந்த எண்ணத்தை மாற்றிக் கொண்டோம் நானும் எனது நண்பனும்.

    ReplyDelete
  41. Bala said:

    //Mohan,

    For the first time, I went inside a Blog. Your stuff are very good.

    You are lucky still you have time to continue with your litrary works. Keep it up.

    Particularly Meeting with Balakumaran I,II and III. Is it called evolution?

    * Bala * //

    ReplyDelete
  42. எழுத்து வேறு. எழுத்தாளர் என்கிற மனிதன் வேறு

    பாலகுமாரன் குறித்து எனக்கும் இது போன்ற ஒரு சம்பவம் உண்டு.

    ReplyDelete
  43. பாலகுமாரனை பார்க்க என்னுடன் வந்த நந்து எழுதிய மெயில்:

    Hai

    I just read. excellent good one.you have forgetten one thing. When he was talking to us, his wife brought cofee to him only which is very utracious. Hope you might have under stood that real life is different. book life is different.

    When you told that you want to discuss about some points in his storey (muranpadukal) he never allowed you to talk. He was telling what ever he has written is correct. A real writter should admit his fans view and he has to discuss freely about your views.

    Even you will get surprise sujatha also having some charaters. Dont be so emitional to book writer, stars, cricketer, musicians. just treat everything is fun. We are for better than this human beings

    Bye
    nandhu

    ReplyDelete
  44. //கிச்சா said //

    மோகன்,
    தமிழ் ஒரு இனிய மொழி என்பது வெளி நாட்டில் இருக்கும் பொது நல்லா புரியும். நல்ல எழுத்துக்கள் படிக்கும் பொது மனசுக்கு ரொம்ப ஆனந்தமா இருக்கும். உங்களுடைய பதிவுகள் மிகவும் நன்றாக உள்ளன. ஆரம்பத்தில் இருந்ததை விட இப்பொழுது இன்னும் நன்றாக உள்ளது.

    உங்களோட பால குமாரனுடன் சந்திப்பு படித்தேன். மிகவும் நல்ல தைரியமான பதிவு. பால குமாரன் இதை தவறாக பார்க்காமல் உங்களோட எழுத்த பாராட்டனும். ஆனா நீங்களும் பாலகுமாரன் சந்திப்போட அவரோட விமர்சனம் பத்தி நிறைய பேசின மாதிரி இருக்கு. அதை உறுதி படுத்தறா மாதிரி கமெண்ட்ஸ் வேற.

    குடும்பத்தில் எல்லாரையும் கேட்டதா சொல்லவும்.
    --
    இப்படிக்கு,
    கிச்சா (ஸ்ரீராம் தம்பி)

    ReplyDelete
  45. மோகன் ஜி...

    நான் கூட உங்களை பாலகுமாரன் சந்திப்பு குறித்து எழுதுமாறு கேட்டது நினைவுக்கு வந்தது...

    எப்போதும் பெரிய மனிதர்களை தூர இருந்தே ரசித்தல் நலம்..

    கிட்டே போனால், அவர்களை நாம் ரசிக்க முடியாதபடி சில சமயம் நிகழ்ந்து விடும்..

    நீங்களும் பாலகுமாரனின் எழுத்தை மட்டுமே ரசித்தல் நலம்...

    பிரபலம் ஆகி விடுவதால் அவர்களின் ப்ரைவஸியை நம்மை போன்ற ஆர்வமிக்க ரசிகர்கள் கெடுத்து விடுவதாக ஒரு பொதுவான நினைவு.

    ReplyDelete
  46. அன்பு மோகன் சாருக்கு .
    வணக்கம் .
    தங்களின் பதில் எனக்கு சந்தோசம் மட்டுமல்ல, புரிதலின் இருப்பு புரிகிறது .
    எழுத்து என்பது தவம் .
    அதை உணர்ந்தவர்கள் எப்படி இருப்பார்கள் என்பதை அறிவது பற்றி இலக்கணம் புரியவில்லை .
    எனக்கும் உங்களை போல வாய்ப்பு கிடைத்தபோது நான் மறுத்துவிட்டேன் .
    சிந்து பைரவி வந்தபோது ஒரு கலை இலக்கிய மன்றத்தின் விவாதத்தில் இது பாலச்சந்தர் கதை அல்ல பாலாவின் கதை என சாடினார்கள் .( இரண்டு மனைவியரை பற்றி இருந்ததால் )
    அதை அப்படியே பாலாவிற்கு கடிதமாக எழுதி இனி அந்த கூட்டத்தில் கலந்து கொள்ள போவதில்லை என சொன்னேன் .
    அவர் மறுத்து ,தொடர்ந்து போக சொல்லி கடிதம் எழுதினார்.இப்படி பல கடிதம் .
    என்மூலம் அவரை படிக்க ஆரம்பித்தவர்கள் சென்னை சென்ற போது அவரிடம் ஆசி வாங்கியதாக சொன்னார்கள் .
    அவரின் எழுத்தை படிக்காவிட்டால் யோகி ராம் சுரத்குமார் என்ற ஞானியுடைய ஆசீர்வாதத்தை இழந்திருப்பேன் .
    எனவே உங்களிடம் மீண்டும் ஒருமுறை என் அன்பை உங்களுக்கும், உங்கள் நண்பர்களுக்கும் சொல்லி முடிக்கிறேன் .--
    என்றென்றும் அன்புடன் ,
    சுகி ...

    ReplyDelete
  47. பதிவு செம என்றால், கம்மண்டுகள் செம செம. மிக ஹெல்தி உரையாடல் ஒன்றை கவனித்தது போலிருக்கிறது. நானும் பாலகுமாரன் பைத்தியம் இருந்து தெளிந்தவனே.
    பாலகுமாரன் "வீட்டை முழுமையாக ஒட்டடை அடித்த என் வாசகனின் அன்புக்கு வணக்கங்கள்" "எங்களுக்கு தரிசனம் செய்வித எக்ஸ் அண்ட் ஓய்க்கு வந்தனங்கள்" என்று எழுதும்போதெல்லாம் நரநரவென்று வரும். உபகாரம் செஞ்சா நல்லவன், இல்லாட்டி வாசகன் வேண்டாமா?
    அன்பர் ஒருவர் சுஜாதா பற்றி சொன்னது போல், வெளிநாட்டில் பார்க்கும் பிரபலங்கள் வேற.
    அந்நிய இடம் கொடுக்கும் பயம், insecurity காரணமாகவோ என்னமோ, அவர்கள் 'கலர்' மாறுவதை நன்கு பார்க்கிறேன். தமிழ்ச்சங்க விழாவுக்கு வந்து காட்டு அலட்டல் செய்த நீயா நானா கோபிநாத், ஒரு உதவி என்று வந்தவுடன் காட்டிய குழையல் செம கயவாளித்தனம்..
    ஸ்ரீராம்.."என் குருவே...நமஸ்காரம்" ரொம்பவே உண்மை. ரொம்பவே ரசித்தேன்..:)) பல்சுவை நாவலில் இந்த பக்கங்களை ரொம்பவே வெறுப்பேன்.
    கேபிள்..சண்ட போட்டு பிரியரா அளவுக்கு எழுத்துச்சித்தர் பிரெண்டா? அத பத்தி சொல்லுங்களேன்..
    அப்பாதுரை..நெறைய விஷயம் வெச்சுருப்பீங்க போல..கொஞ்சம் விவரமா சொன்னா நல்லா இருக்கும்..

    எது எப்படியோ, கெட்டு குட்டிச்சுவராகி இருக்கவேண்டிய என்னை 17 வயதில் ஓரளவுக்கு செம்மைப்படுத்திய பாலகுமாரனுக்கு என் நன்றிகள் என்றும் உரியவை. அவர் எழுத்து இல்லாவிடில் என்னவாகியிருப்பேன் என்ற பயம் இப்போவும் உண்டு.

    ReplyDelete
  48. கொஞ்சம் தாமதமாய் உங்கள் பதிவினை வாசிக்க நேரிட்டது......இருந்தாலும் பாலகுமாரனின் எழுத்துக்களால் ஈர்க்கப்பட்டவன் என்ற முறையில் தார்மீக கருத்தளித்தே தீரவேண்டும்,.....

    என் முதல் கேள்வி உங்களிடம்....

    பாலகுமாரனின் எழுத்தை நீங்கள் வாசித்தவர் நேசித்தவர் எனில் அடிக்கடி பால சொல்லும் ஒரு வாசகம் ஒன்று உங்களுகு நினைவுக்கு வரும் என்று நினைக்கிறேன்....அதாவது... " நான் என் எழுத்தின் மூலம் கற்றுக் கொள்கிறேன் " என்று சொல்லுவார்....அவர் எழுதுவது அவரையும் கற்றுக் கொள்ளவைத்து வாசிப்பவனையும் கற்றுக் கொள்ளவைத்தது என்பது நிதர்சனமான உண்மை....

    பால தானாய் தன்னை உங்களிடம் காட்டியிருக்கிறார்... மாறாக ம்ம்ம் என்றால் பிரபலம் என்ற மமதை கொள்ளும் மனிதர்கள் போல அவர் நடித்திருக்க அதிக நேரம் ஆகியிருக்காது....அல்லவா? ஒரு மனிதரின் இயல்பு வேறு படைப்பு வேறு.. படைக்கும் பொழுதில் ஒரு கிளர்ந்த நிலையில் எழுத்துக்கள் வந்து விழும்.....

    அவர் ஒரு டம்ளர் தண்ணீர் கொடுக்கவில்லை என்று எதிர்பார்த்த நீங்கள் அது கிடைக்கவில்லை என்றவுடன் விரக்கிதிக்கு போய் கோபம் கொண்டீர்களே....ஆனால் அவருடைய எழுத்துக்கள் எல்லாம் உங்களை சீராட்டியிருக்கிறதா இல்லையா? உங்களை வழி நடத்தியிருக்கிறதா இல்லையா?

    இதோ பாலாவின் எழுத்தில் தாக்கம் இல்லையெனில் இங்கே அவரை விமர்சிக்கும் அத்தனை பேரும் அவரைச் சீண்டிப்பார்த்திருப்போமா இல்லைதானே? பாலா தனது பைபாஸ் ஆப்பரசேன் செய்த போது எத்தனை வாசகர்கள் அவருக்கு பொருளூதவியும் மற்றும் நேரே போய் அவரைக் காணவேண்டும் என்றும் எண்ணியிருப்பார்கள்...?

    இயல்பை வெளிப்படுத்தியிருக்கிறார்? அவரைப்பொறுத்த வரையில் எத்தனை பேரை ஒரு நாள் சந்திக்க வேண்டுமோ.....? நானும் பாலாவைக் கண்டிருக்கிறேன் மயிலாப்பூர் கபாலிஸ்வரர் கோவிலில், கைபிடித்து, தோளில் கைபோட்டு கொஞ்சம் கூட ஒரு ஈகோ இல்லாத சாதாரண மனிதரைப் போல அளாவளாவி இருக்கிறார்.....

    பாலவின் எழுத்துக்கள் என்ன சொல்லிக் கொடுத்தது என்று மட்டும் பார்த்துவிட்டு...பாலாவைப் பற்றிய ஆராய்ச்சியை விட்டு விடலாமே தோழர்....!

    நன்றிகள்!

    ReplyDelete
  49. //When he was talking to us, his wife brought cofee to him only which is very utracious. Hope you might have under stood that real life is different. book life is different//

    எனக்கு இது தான் நினைவிற்கு வருகிறது. பள்ளிக்கூட வகுப்புகளில் சின்னஞ்சிறு குழந்தைகள் முன் ஆசிரியர் வடையும் டீயும் சாப்பிடுகிறார்களே? அதுவும் குழந்தைகள் பசியோடு இருக்கும் அந்தச் சாயந்தரப் பொழுதுகளில். அது போல என எண்ணிக்கொள்ள வேண்டியது தானோ??!
    சரி, அவருக்கு எத்தனை அலுவல்களோ. ஒரு நாளைக்கு எத்தனைப் பேரைச் சந்திப்பாரோ! எழுத்தாளரின் எழுத்துகளுடன் அவரது சொந்த வாழ்வைத் தொடர்பு படுத்திப் பார்க்காமல் பழகும் பக்குவம் நமக்கு வரவேண்டும் என்பது எனது தாழ்மையான கருத்து...!

    ReplyDelete
  50. ////அலோ: அப்ப நான் ஏதும் எழுத ஆரம்பிக்கலைங்க. என்னமா கலாய்க்கிறீங்க.////

    ஓ.. இப்ப ரொம்ம்ம்ப எழுதுறீங்களோ? ஒன்றும் இல்லாத உங்களுக்கே இவ்வளவு இருக்கும் போது, அவருக்கு இருக்காதா அய்யரே ??

    ReplyDelete
  51. மோகன்குமார் இப்பதான் எனக்கு இதை படிக்க நேர்த்தது... நான் முதன் முதலில் பாலாவை கடற்கரையில் சந்தித்த போது அந்த பிம்பம் உடைந்து அவரை சநத்திக்க வேண்டும் என்ற ஆசையை உடைத்தேன்... சாருவின் புத்தக வெளியீட்டில் கூட அவரை பார்த்தும் அவரிடம் பேச யோசித்தேன்.. காரணம்... அவரும் லட்சம் பேரை தெரியும் ஆனா அவருக்கு யாரையும் தெரியாது... ரெண்டாவது அவருக்கு பல டென்சன் இருக்கும்... பட் அவரது உதவியாளர் மூலம் அழைப்பு வந்த காரணத்தால் நான் அவரை போய் பார்த்தேன்... காரணம் இன்னைக்கு நான் இப்படி பிளாக் எழுதுவும்,சோம்பல் இல்லாமல் வெற்றியை நோக்கி உழைக்கவும் எனக்கு பலாவின் எழுத்துக்கள் கற்றுக்கொடுத்து இருக்கின்றன. அதனால் அவரை என்னால் எப்போதும் வெறுக்க முடியாது... அவரை நான் மனது முழுதும் வைத்து கொண்டாடினாலும் வெறித்தனமாய் கடிதம் எல்லாம் அவருக்கும் நான் எழுதிய கிடையாது.. காரணம் பாலாவின் கதைகள் வேறு அவர் வேறு என்று நான் புரிந்து கொண்டது... அவரும் என்னை போல ஒரு மனிதன்.. அவர் சொல்லும் எல்லாத்தையும் நான் வேதவாக்காக நான் என்றுமே எடுத்துக்கொண்டதில்லை..

    முடிந்தால் இந்த பதிவை வாசியுங்கள்...
    http://www.jackiesekar.com/2011/07/05072011.html

    நன்றி
    பிரியங்களுடன்
    ஜாக்கிசேகர்.

    ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...