Monday, July 22, 2013

தொல்லை காட்சி- சூப்பர் சிங்கர் வைஷாலி -வாலி - தாயுமானவன்

வாலி 1000

கடந்த சில வாரங்களாக வசந்த் டிவியில் "வாலி 1000" என்கிற நிகழ்ச்சி தொடந்து ஒளிபரப்பாகி வருகிறது. வாலி அவர்கள் தன் சினிமா வாழ்க்கை குறித்து பல செய்திகளை பகிர்கிறார். கவிஞரின் மரணத்துக்கு முன் எடுத்த பேட்டி. மிக மெதுவாக இப்போது ரீ டிலி காஸ்ட் வருகிறது.

நான் பார்த்த அன்று - LR ஈஸ்வரி வாலி அவர்களை பேட்டி எடுத்து கொண்டிருந்தார். 1958ல் பாடல் எழுத சென்னை வந்தது - முதல் பாட்டு எழுதிய பின்னும், பல வருடங்கள் வாய்ப்பின்றி இருந்தது பின் MGR படத்தின் பாடல் எழுதிய பின் தொடர்ந்து வாய்ப்புகள் கிடைத்தது என பல விஷயங்கள் பகிர்கிறார். ஆர்கெஸ்ட்ரா வைத்து அவரின் பிரபல பாடல்கள் சில அவர் முன்னணியில் பாடுகிறார்கள்

வாரம் ஒரு நாள் மட்டும் (புதன் அல்லது வியாழன் என நினைக்கிறேன்) மாலை நேரத்தில் வரும் இந்நிகழ்ச்சியை முடிந்தால் காணுங்கள் !

சூப்பர் சிங்கர் கார்னர் - வைஷாலி

சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் இந்த சீசனில் பாடுவோர் சிலரை பற்றி அவ்வப்போது இங்கு எழுத ஐடியா .....



வைஷாலி - இவரை எனக்கு பிடிக்க ஒரே காரணம் தான்.. இந்த சீசனில் என் கண்ணுக்கு அழகாய் தெரிபவர் இவர் தான். கல்லூரி மாணவி என நினைக்கிறேன். கண்களும் சிரிப்பும் செம அழகு. பாடுவது அவுட் ஸ்டாண்டிங் அளவில் இல்லை - ஆவரேஜ் தான் என்பதால் கடைசி 10 க்குள் எல்லாம் வர வாய்ப்பில்லை



வைஷாலி நன்கு பாடிய பாடல் ஒன்று



சீரியல் பக்கம் - தாயுமானவன்

எப்போதோ சில முறை பார்த்ததில் புரிந்த வரை சொல்கிறேன் :

4 பெண் குழந்தைகளை தாய் இன்றி வளர்க்கிறார் ஒரு தந்தை (யாருங்க அவர்? இதுவரை வேறெங்கும் பார்த்ததில்லை). முதல் பெண்ணுக்கு திருமணம் முடியும் முன்பே இரண்டாவது பெண் சொல்லாமல் கொள்ளாமல்  கல்யாணம் முடித்து வந்து விடுகிறார். அந்த மருமகனோ - முதல் நாளே அனைத்து கெட்ட பழக்கங்கள் கொண்டவர் என்பது தெரிய வருகிறது

சரவணன் - மீனாட்சியில் சரவணன் பெற்றோராக வரும் குயிலி மற்றும் ராஜசேகர் அதே பாத்திரங்களாக இக்கதையில் வருகிறார்கள் (ஒரு சீரியல் பாத்திரங்கள் இப்படி திடீர் திடீரென மற்ற சீரியலில் வருவார்கள் என ஹவுஸ் பாஸ் சில உதாரணங்களுடன் சொல்கிறார்) !!

பல வருடங்கள் இழுக்க தேவையான அனைத்து விஷயங்களும் இருப்பது புரிகிறது

சன் சூப்பர் சிங்கர் 

விஜய் டிவி சூப்பர் சிங்கர் போலவே சன் டிவியிலும் குட்டி பசங்களை வைத்து ஒரு நிகழ்ச்சி நடத்துகிறது. ஆனால் குவாலிட்டி நிச்சயம் விஜய் அளவிற்கு இல்லை.

இந்த வாரம் செமி பைனல் நடத்தினர். கரகாட்டக்காரன் பாடலை ஒரு பெண் பாட அப்போது கங்கை அமரன் சொன்னது : " கதை என்று எதுவும் சொல்லாமல் கரகாட்டக்காரன் படத்துக்கு பாடல்கள் இளையராஜாவிடம் வாங்கினோம் ஒரு டூயட்; ஒரு சோக பாட்டு, ஒரு சாமி பாட்டு இப்படி சொல்லி- அதற்கு அவர் மெட்டு தர - பாடல்கள் ரெடி ஆனது "

நிகழ்ச்சி முழுக்க பார்க்க முடிய வில்லை. ப்ரோமோவில் 3 பேர் மட்டும் தான் பைனல் செல்கின்றனர் என்று ஜட்ஜ் அனுராதா ஸ்ரீராம் சொல்ல, மாஸ்டர் (!!!??) கங்கை அமரன் கோபித்து கொண்டு கிளம்புவதை காட்டி காட்டி மக்களை பார்க்க வைக்க சொல்லி கூவி கொண்டிருந்தனர் . கடைசி டிராமாவை பார்க்க வில்லை; எப்படி முடிந்தது என தெரியலை !

விஜய் டிவி யில் PBS நினைவாக ...

PBS நினைவாக என விஜய் டிவி யில் அவர் பல பாடல்களை - பிற பாடக பாடகிகள் பாடுவதை ஒளிபரப்பினர்

இளம் பாடகர்கள் பாடியது ஓரளவு ஓகே. ஆனால் P. சுசீலா, LR ஈஸ்வரி இருவரும் - பாட்டி வயதில் இருந்து கொண்டு - இப்ப வந்து பாடுறேன் என பாடல்களை கொடுமை செய்தனர்

ரோஜா மகளே ராஜகுமாரி எவ்வளவு அருமையான பாட்டு - அதை இன்றைய P. சுசீலா குரலில் கேட்பது கொடுமையிலும் கொடுமை. இன்னொரு பக்கம் LR ஈஸ்வரி " ராஜ ராஜஸ்ரீ ராணி வந்தாள் " என இழுப்பதற்குள் குரல் முழுமையாய் கட்டி கொண்டு கர்ண கொடூரமாய் ஒலிக்கிறது ! முடியல !

சூப்பர் சிங்கரில் தாளம் பற்றி பேசும் நடுவர் ஸ்ரீனிவாஸ் அன்று பாடிய பாட்டில் தாளம் ஒரு பக்கம் போக இவர் வேறு பக்கம் போனார் (நிலவே என்னிடம் நெருங்காதே )

இந்த கொடுமைகளுக்கு சிகரம் வைத்தார் போல " ஆயிரம் நிலவே வா " பாட்டை கூறு போட்டு கொலை செய்தனர் ஹரிஹரனும் சுசீலாவும் ! 

குறிப்பிட்ட சரணத்தில்  இவர் ஒரு வரி பாட, அடுத்த சரணத்தின் வரியை இன்னொருவர் பாடி கொண்டிருந்தார். கடைசி வரை தப்பு தப்பா பாடுகிறோம் என தெரியாமல் இஷ்டத்துக்கு இழுத்து நடுவில் வரிகளை விட்டு விட்டு " லா லா லா " பாடி கடைசியில் எதோ பெரிய காரியம் சாதித்த முக பாவத்துடன் பாட்டை முடித்தனர் !

ஆளை விடுங்கடா சாமிகளா என 4 பாட்டினில் எஸ் ஆகிட்டேன் !

மெகா டிவியில் வாணி ஜெயராம் 

பழைய பாடகிகள் எல்லார் குரலும் மோசமாகி விடலை என அடுத்த நாளே மெகா டிவி யில் வாணி ஜெயராம் பாடிய போது அறிய முடிந்தது. மெகா டிவி நிறுவனர் - தங்கபாலு வருட வருடம் இசை துறையை சார்ந்த ஒருவருக்கு விருது தருகிறார். இவ்வருட விருது சில மாதங்களுக்கு முன் நடந்த விழாவில் வாணி ஜெயராம்க்கு கிடைத்தது அதே விழாவில் வாணி ஜெயராம் பல பாடல்கள் அற்புதமாய் பாடியதை தான் மெகா டிவியில் ஒளி பரப்பி கொண்டிருந்தனர்.

வாணி ஜெயராம் பாடியதை கேட்ட போது ஒன்று புரிந்தது. சினிமா அல்லது மேடையில் பாடுகிறாரோ இல்லையோ இத்தனை வருடங்களாக விடாமல் தினம் அவர் பயிற்சி எடுத்திருக்கிறார். அந்த பயிற்சி இன்றி - பழைய பாட்டை கேட்பது மாதிரியே அவரால் பாடியிருக்கவே முடியாது !

இதே பயிற்சியை தினம் நமது விருப்பத் துறையிலும் காட்டினால் நாமும் ஷைன் பண்ணுவோம் இல்லையா ?

நீயா நானாவில் பெண்களை பற்றிய வர்ணனை

நேற்றைய நீயா நானாவில் பெண்களை பற்றிய வர்ணனை குறித்தான "போட்டி" நடந்தது . வித்யாசமான ஒரு தலைப்பு. துவக்கத்தில் வந்த வர்ணனைகள் பல "அட !"போட வைத்தாலும் பின் 6 பேரை மட்டும் தேர்ந்தெடுக்கிறோம்; ஆறில் இருந்து 4; நான்கில் இருந்து 3 என குறையும் போது சுவாரஸ்யம் குறைந்து விட்டது

மக்களை சுதந்திரமாக பேச விடும்போது தான் நன்கு பேசினர். "இத்தனை பேரை தேர்ந்தெடுக்கிறோம் " என்று பாதியில் சொன்ன பிறகு எதோ டென்ஷனிலேயே அவ்ளோ கவித்துவமாக பேசலை ! முடிந்தால் இந்நிகழ்ச்சியின் முதல் 45 நிமிடம் யூ டியூபில் காணுங்கள். ரசிப்பீர்கள் என நம்புகிறேன்
******
அண்மை பதிவு :

உணவகம் -அறிமுகம் ரிலாக்ஸ் பாஸ்ட் புட்ஸ் நங்கநல்லூர்

9 comments:

  1. தொல்லை காட்சி பற்றி ரசிக்கவைத்த பகிர்வுகள்..பாராட்டுக்கள்..!

    ReplyDelete
  2. வாலி-1000 இன்னுமா முடியவில்லை? ஆறு மாதங்களுக்கு முன் ஆரம்பித்தார்களே! இருந்தாலும் பரவாயில்லை; இறப்பதற்குச் சில வாரங்கள் முன்பு வரை வாலி என்ன பேசினார் என்பதைத் தெரிந்துகொள்ள ஒரு வாய்ப்பு! –நியூஜெர்சியிலிருந்து கவிஞர் இராய.செல்லப்பா.

    ReplyDelete
    Replies
    1. அப்படியா? தங்கள் வருகைக்கு நன்றி சார் !

      Delete
  3. வாலி 1000 ஏற்கனேவே வசந்த் டிவியில் சென்ற ஆண்டே ஒளிபரப்பானது .வாரவாரம் முழுதும் ரசித்து பார்த்துவந்தேன்.இது ரீ டெலிகாஸ்ட் தான்.--

    ReplyDelete
    Replies
    1. நண்பா ரீ டெலிகாஸ்ட் என்று தற்போது குறிப்பிட்டு விட்டேன் ; நலமா இருக்கீங்களா ?

      Delete
  4. //ஆளை விடுங்கடா சாமிகளா என 4 பாட்டில் எஸ் ஆகிட்டேன் !//

    ஓ! பாட்டிலும் போடுவீங்களா? அதுவும் 4 பாட்டிலா? 4 குவாட்டர் பாட்டில் என்றால் பிழைக்கலாம்; ஃபுல் என்றால், ஆண்டவன் பொற்பாதம் என்கிறார்களே அங்குபோய்ச் சேரலாம். இதற்குத்தான் தமிழில் சாரியை என்று ஒன்று இருக்கிறது. இங்கே 'இன்' சாரியை பெற்று, 'பாட்டினில்' என்று வரவேண்டும். எழுத்தாளர் ஆகிவிட்டீர்கள் அல்லவா, தமிழைக் காதலியுங்கள்!

    வைஷாலி நன்றாகத்தானே பாடுகிறார்?

    ReplyDelete
    Replies
    1. ஆஹா ராசு சார் :)) எழுத்தாளர் எல்லாம் இல்லை பகுதி நேர பதிவர் :)

      " பாட்டினில் " மாற்றி விட்டேன் :)

      Delete
  5. ஆமாம் தாங்கள் எழுதியது சரிதான்.நீயா நானாவில் முதலில் இருந்த ஆர்வம் போகப் போகக் குறைந்ததற்கு காரணம்.இதுதானா?
    வாழ்க வளமுடன்
    கொச்சின் தேவதாஸ்

    ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...