Wednesday, February 5, 2014

மும்பை போலிஸ் & நார்த் 24 காதம் (மலையாளம் ) - விமர்சனம்

 மும்பை போலிஸ் (மலையாளம் ) - விமர்சனம் 

படத்தின் முதல் நிமிடமே அதிரடியாய் துவங்குகிறது. ஒரு கொலையை துப்பறியும் ஹீரோ பிரித்விராஜ் தனது மேலதிகாரிக்கு போன் செய்து கொலையாளி யார் என சொல்ல துவங்கும் முன் அவர் ஓட்டும் கார் விபத்துக்குள்ளாகிறது.

அந்த விபத்தில் ஹீரோவுக்கு பழையன எல்லாம் மறந்து போகிறது. இருப்பினும் மீண்டும் அந்த கொலையை துப்பறிகிறார். கொலையாளி யார் என அவருக்கு தெரிய வரும் போது .. நாமும் அதிர்ச்சியில் உறைந்து போவது உண்மை.



இத்தகைய படங்களில் ஒரு விஷயத்தை பெரிது படுத்தி - நம் ஆர்வத்தை வளர்த்து கொண்டே சென்று - கடைசியில் இதுவரை பார்த்திராத புது பாத்திரத்தை அறிமுகப்படுத்தி இவர்தான் கொலையாளி என்பர். ஆனால் இப்படத்தில் நிகழ்வது முற்றிலும் வேறான அனுபவம். அதிலும் கொலைக்கான காரணம் மிக ஆழமானது. பொதுவாய் சினிமாக்களில் அதிகம் தொடாத ஒரு விஷயத்தை அங்கு விரசமின்றி - மிக சரியாக தொட்டுள்ளனர்.

நினைக்க, நினைக்க எப்படி இவ்வளவு அழகாக ஒரு கதையை கன்சீவ் செய்தனர் என்ற வியப்பு தான் மேலிடுகிறது

Hats off to the Screenplay writer and Director. Don't miss this suspense thriller !

நார்த் 24 காதம் 

"அன்பே சிவம் " படத்தை சில இடங்களில் நினைவு படுத்தும் கதை. ஒரு பயணமும், அதில் நிகழும் இடைஞ்சல்களும், பல்வேறு வாகனங்களிலும் பயணம் செய்து சேர வேண்டிய இடத்தை கிளை மாக்சில் அடைவதும் இங்கும் நிகழ்கிறது

அன்பே சிவம் எப்படி ஒரு நெகிழ்வான அனுபவத்தை நமக்கு தந்ததோ, அதற்கு இணையான அனுபவத்தை இப்படமும் தரத் தவற வில்லை.



படத்தில் ரொம்பவும் எரிச்சல் படுத்துவதும் சரி, போகப்போக ரசிக்க வைப்பதும் சரி பாஹத் பாசில் பாத்திரம் தான். இதே போல "சுத்தம் சுத்தம் " என படுத்தும் சில ஆசாமிகளை நான் அலுவலகத்தில் கண்டிருக்கிறேன். ஆகவே என்னால் கூடுதலாக ரசிக்க முடிந்தது

நெடுமுடி வேணு ... பிறவி நடிகர்.. அட்டகாசமாக நடிக்கா விட்டால் தான் ஆச்சரியப்படணும். படத்தின் இறுதியில் இவரின் நடிப்பு  கண்ணில் நீர் வர வைத்து விடும்.

சுருதி.. "கண்கள் இரண்டால் " பாடலில் தாவணியுடன் வந்த அதே சுருதி.. அற்புதமான பாத்திரத்தில் நடித்துள்ளார். (படம் முழுவதும் ஒரே உடை தான்... நெடு முடி வேணுவுக்கும்...)

முக்கால் வாசி படத்திற்கு பின் சற்று இழுவையாக ஆவது போல் உணர்வு. படத்தின் நீளத்தை சற்று குறைத்திருக்கலாம்.

"என்ன கொடுமை சார்" புகழ் பிரேம்ஜி தமிழராகவே வருகிறார். அவரது எபிசொட் அழகான கவிதை. மனிதர் தமிழில் தான் ஒரே மாதிரி நடிக்கிறார். வேறு விதமாய் நடிக்கவும் இவருக்கு தெரிந்தே இருக்கிறது

சக மனிதனை நேசி; அது தான் முக்கியமானது. மற்றவை எல்லாம் இரண்டாம் பட்சம் தான் என்ற தாஸ்தாவ்ஸ்கியின் வரிகள் தான் படத்தின் அடி நாதம்.

தனது முதல் படத்திலேயே பவுண்டரி அடித்திருக்கும் இயக்குனருக்கு பாராட்டுகள் !

8 comments:

  1. சூப்பர் ஜி..... உங்களது விமர்சனம் படம் பார்க்கும் ஆவலை தூண்டுகிறது. சீக்கிரமே பார்த்து விடுகிறேன் !

    ReplyDelete
  2. மலையாள படங்கள் என்றாலே வித்தியாசம் தானோ...? நம்ம ஆட்கள் கண்ணில் பட்டு இன்னோரம் பல சிந்தனைகள் ஓடிக் கொண்டிருக்கும் என்று நினைக்கிறேன்...!

    ReplyDelete
  3. thanks a lot for your short and sweet review sir,not revealing much story,so it is interesting to watch,yet to watch these films.

    ReplyDelete
  4. ஒரு சஸ்பென்ஸ் படத்துக்கு எப்படி ரிவ்யு எழுதணும்னு உங்க கிட்ட கத்துக்கணும் சார். சொல்ல வேண்டியதை மட்டும் சொல்லி சஸ்பென்ஸ் உடைக்காமல்...

    பிரமாதம்.. படங்களும்தான்!

    ReplyDelete
  5. இத எத்தன பேரு ரிமேக் பண்றோம்ங்கிற பெயரில் கொல்ல போறாங்களோ!(தமிழில்).....


    இது என்னுடைய வலைபக்க முகவரி;

    http://pudhukaiseelan.blogspot.in/

    ReplyDelete
  6. நல்ல விமர்சனம். இரண்டாம் படம் பார்க்க நினைத்திருக்கிறேன்.

    ReplyDelete
  7. ப்ரித்விராஜ் இந்த கேரக்டரில் நடிக்க ஒப்புக்கொண்டதே ஆச்சரியம்.. தமிழ் நடிகர்கள் யாரையாவது அந்த கேரக்டரில் நடிக்கச் சொல்லுங்க பார்ப்போம்.....

    ReplyDelete
  8. தங்களின் தளம் இன்றைய வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தியுள்ளது.
    அன்பு வாழ்த்துகள்.

    மேலும் விவரங்களுக்கு கீழ் உள்ள இணைப்பைச் சொடுக்கவும் நன்றி.

    வலைச்சர தள இணைப்பு : http://blogintamil.blogspot.com/2014/02/blog-post_15.html

    ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...