Thursday, April 10, 2014

மான் கராத்தே....சினிமா விமர்சனம்

ந்தேகமே இல்லை- எதிர் நீச்சல் பார்ட் டூ தான். காதலியை கவர - புதிதாய் ஒரு விளையாட்டை கற்று - போட்டியில் வெல்கிறார் சாதாரண ஹீரோ.

இங்கு அடிஷனலாக கொஞ்சம் பாண்டஸி சேர்த்துள்ளனர். .. !( முதல் காட்சிலேயே கிளை மாக்சில் நடப்பதை புட்டு புட்டு வைத்து விடுகிறார்கள்)

ஒரு படம் எதற்கு பார்க்கிறோம் ? கவலை மறந்து சிரிக்க, விசில் அடிக்க, பாட்டு வரும்போது ஆட ! .... ஆட தயங்குவோர் - கால்களை ஆட்டி ரசிக்க, படம் முடிந்து வரும்போது மகிழ்ச்சியாக எழுந்து வர .. இதானே சார் வேண்டும் !

இவை அத்தனையும் உண்டு மான் கராத்தேயில் !

விஜய் போலவே அறிமுகமாகிறார் ஹீரோ.. .. டான்சில் .. அடேங்கப்பா.... எவ்ளோ பெரிய பாய்ச்சல்.. + முன்னேற்றம் ! சான்சே இல்லை !



சிவாவை நாம் ரசிக்க காரணம் - நம்ம வீட்டு பையன் போல இருப்பதால் தான்..

டிவி அல்லது சினிமா என எங்கு 2 நிமிடம் பார்த்தாலும் சில தடவையாவது சிரிக்க வைத்து விடுகிறார்... இது தான் அவரது மிக பெரிய பலம்.

படம் ரிலீஸ் ஆகி 5 நாள் கழித்து வார நாளில் மதிய காட்சி ... திருவான்மியூர் S -2 !  இளைஞர் கூட்டம் நிரம்பி வழிகிறது. ரஜினி, விஜய் , அஜீத் ரேஞ்சுக்கு அறிமுக காட்சி, பாடல்களில் அப்ளாஸ் தூள் பறக்கிறது...

தப்பு தப்பாக ஆங்கிலம் பேசுவது ( பீ கேர்லஸ் !) - அப்பாவியாக பல்பு வாங்குவது என சிவகார்த்தி ப்ராண்ட் காமெடி தான்... ஆனால் அட்டகாசமாக வொர்க் அவுட் ஆகிறது !

குட்டி பசங்க மற்றும் இளைஞர்களை படம் மிகவும் ஈர்க்கிறது. எந்த சந்தேகமும் இல்லை.

அடுத்தடுத்த வெற்றிகள் மூலம் விஜய் , அஜீத்துக்கு அடுத்த லெவலில் இருக்கும் விஷால், ஜெயம் ரவி, ஆர்யா போன்றோரை - சிவகார்த்தி அசால்ட்டாக தாண்டி அடுத்த ரேஞ்சுக்கு சென்று விட்டார்.

அப்புறம் ஏன் முதல் சில நாளில் படம் பற்றி அவ்வளவு சுமாரான ரிவியூ ?

அநேகமாய் நிறைய எதிர்பார்ப்புடன் மக்கள் சென்றிருப்பர் என நினைக்கிறேன்...

முதல் சில நாள் வரும் விமர்சனங்கள் சில நேரம் தவறாகவும் இருக்கும் என இப்படம் உணர்த்துகிறது...

விமர்சனம் எழுதணும் என்ற மனநிலையுடன் போனால் இப்படத்தை கிழித்து தொங்க விட்டு விடலாம்.. அவ்ளோ லாஜிக் ஓட்டைகள்..

உதாரணமாய் " எந்த அப்பா 10 திருக்குறள் சொன்னால் மகளை திருமணம் செய்து தருவேன் ?" என்பார் என லாஜிக் பேசலாம்.. ஆனால் அந்த லாஜிக் மறந்துவிட்டு  பார்த்தால்  - திருக்குறள் சம்பந்தமான அந்த 10 நிமிஷமும் பட்டாசு மாதிரி சிரிப்பு.. ரகளை !

கிளைமாக்சுக்கு சற்று முன்பு தான் சற்று செண்டி மெண்ட் ; அதை தவிர மற்ற எல்லா காட்சியும் சிரிக்க வைக்கவே முயல்கிறார்கள். பெருமளவு வெற்றியும் பெறுகிறார்கள்



பாடல் காட்சியில் பெரும்பாலும் நாம் - எதிர் பாலினத்தினரை  தான் அதிகம் கவனிப்போம்.. ( நாம் ஆண் என்றால் ... ஹீரோயினை ! ) ஆனால் இங்கு - இளைத்து அவ்ளோ அழகாக ஹன்ஷிகா இருந்தும் பாடல் காட்சியில் சிவகார்த்தியை விட்டு கண்ணை நகர்த்த ரொம்ம்ம்ப கஷ்டப்பட வேண்டியுள்ளது ! செம ஸ்கரீன் ப்ரெசென்ஸ் !

ஹன்ஷிகா அந்த பாத்திரத்துக்கு apt ! நன்கு  இளைத்திருந்தாலும் ஒரு பாடலில் தொப்பை குலுங்குவது சற்று பயமுறுத்துகிறது !

சிவா மற்றும் ஹன்ஷிகா காஸ்டியூம்ஸ் யூத் & கலர்புல் !

சூரி வரும் காட்சிகள் அனைத்தும் தியேட்டர் குலுங்குகிறது. அந்தக் கால நாகேஷ் நடிக்க வேண்டிய பாத்திரம் அது.. அவரை மனதில் வைத்து கொண்டு தான் முயற்சித்துள்ளார் போலும். கலக்கல் !

சதீஷ் மற்றும் அவர் நண்பர்களில் 2 பெண்கள் ..ஓகே. ஓகே மிதுனா (கீழுள்ள படத்தில் கண்ணாடி அணியாதவர் ) சில நேரம் அழகாக இருந்தாலும் சில கோணங்களில் Aunty  போல் இருக்கிறார்.



படத்தில் குறைகளே இல்லையா ?

நிச்சயம் இருக்கு.

லாஜிக் .....மூச் ! யோசிக்கவே கூடாது !

சூப்பர் டூப்பர்  பாட்டு அனிரூத் தந்திருந்தாலும் எதற்குமே லீட்  சரியில்லை; அட்டகாசமான பாட்டுகள் ஆங்காங்கு செருகப்பட்டிருக்கின்றன.. பாடல் வரும் சூழலுக்கு இன்னும் சற்று மெனக்கெட்டிருக்கலாம் (கும்கி போன்ற சில படத்தில் பாடல் அட்டகாசமான இடத்தில் அமைந்திருக்கும்   !)

இவை இரண்டை தவிர வேறு ஏதும் பெரிதாய் குறைகள் இல்லை

விஜய் நடித்த திருமலை போன்ற மெகா ஹிட் (??) படங்களை விட இப்படம் 100 மடங்கு மேல். அட்லீஸ்ட் மனசு விட்டு சிரிக்கிறோம் !

நிச்சயம் இது தோல்விப்படமாய் இருக்கப்போவதில்லை .. கோடை விடுமுறையில் போட்ட காசுக்கு மேல் வசூலிக்க தான் போகிறார்கள்...!

இப்படியே தொடர் வெற்றி தந்தால் சிவகார்த்திகேயன் விஜய் - அஜீத் லெவலுக்கு வர வாய்ப்புகள் மிக, மிக  அதிகம் ! 

மான் கராத்தே .....விடா முயற்சி விஸ்வரூப வெற்றி !

7 comments:

  1. நல்லா இருக்குன்னு சொல்றீங்க! சரி. தில்லியில் இன்னும் வெளியிட வில்லை.

    ReplyDelete
  2. கமலா தியேட்டர் .இடைவேளை.கழிப்பறை.முழுதும் நீங்கள் சொல்லும் அதே இளைஞர் கூட்டம்.படத்தை நாராசமாய் திட்டுகிறார்கள்.உட்காரமுடியவில்லை.மொக்கை காமெடி என்று.விஜய் -அஜித் அடுத்து என்று சில வருடங்களுக்கு முன் கார்த்தி சரசரவென வந்தார்.இப்போ எங்கே? சென்ற ஆண்டு இளைஞர்கள் கொண்டாடிய விஜய் சேதுபதி இப்போ சீண்ட ஆள் இல்லை(3 படம் அவுட்).விஷால் கூட 2006-07 கால கட்டத்தில் அடுத்த விஜய் என்று பேசப்பட்டார்.இப்போ? ஒரு ஹீரோ அடுத்து அடுத்து சில ஹிட் கொடுப்பதும் பின் பத்தோடு பதினொன்னாக ஆவதும் சகஜம்.

    ReplyDelete
    Replies
    1. நீங்கள் சொல்வது சரிதான். எனது நண்பர்கள் வட்டமும் படம் மொக்கை என்றுதான் கூறினார்கள்.

      Delete
  3. நானும் இன்னும் பார்க்கலை! பார்க்க நினைக்கும் படங்களில் ஒன்றாக சேர்ந்துள்ளது! நல்லதொரு விமர்சனம்! நன்றி!

    ReplyDelete
  4. இதே போல் தொடர்ந்தால்...

    வித்தியாசம் இல்லையென்றால்...

    ReplyDelete
  5. நன்றி வெங்கட் நாகராஜ், தனபாலன் சார், தளிர் சுரேஷ், ரீகன் & சீன் கிரியேட்டர்

    முகநூலிலும் சில நண்பர்கள் இப்பதிவை பகிர்ந்த போது படம் பிடிக்கலை என கமண்ட் செய்திருந்தனர்.

    சிவகார்த்தியை ரசிப்போருக்கு படம் பிடிக்கும் என தோன்றுகிறது !

    நன்றி !!

    ReplyDelete
  6. உதாரணமாய் " எந்த அப்பா 10 திருக்குறள் சொன்னால் மகளை திருமணம் செய்து தருவேன் ?" என்பார் என லாஜிக் பேசலாம்.. ஆனால் அந்த லாஜிக் மறந்துவிட்டு பார்த்தால் - திருக்குறள் சம்பந்தமான அந்த 10 நிமிஷமும் பட்டாசு மாதிரி சிரிப்பு.. ரகளை ! Being A Tamilan We are assemed of critizing திருக்குறள் but still website is supporing this movie

    ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...