Saturday, June 27, 2015

மேகாலயா பயணம் - ஒரு FAQ

மேகாலயாவை தேர்ந்தெடுத்தது எப்படி ?

நண்பர்கள் அச்சுதன் - இந்திராணி சில மாதங்கள் முன் மேகாலயா சென்று வந்தனர். அவர்கள் இவ்விடம் பற்றி மிக நன்றாக சொன்னது தான் துவக்கம். அவர்கள் தந்த மாதிரி திட்டம் - இந்தியாமைக் எனும் பயண வெப் சைட்டில் பகிர - அங்கு கரிக்கோர் என்ற மேகாலயாவை சேர்ந்த நண்பர் அதனை சற்று மாற்றி அமைத்து தந்தார். குறிப்பாக அவர் ஒவ்வொரு நாளும் வெவ்வேறு இடத்தில் தங்க சொல்ல, முதலில் மிக தயக்கமாய் இருந்தாலும் பின்னர் சற்று ரிசர்ச் செய்ததும் அது தான் நல்லது என்பது புரிந்தது. காரணம் ஒவ்வொரு இடத்திற்கும் காலை 2 மணி நேரமாவது பயணம் செய்ய வேண்டும். பின் மாலையும் அப்படி பயணம் செய்வது அவ்வளவு உகப்பானது இல்லை என்பதால் - வெவ்வேறு இடத்தில் தங்குவது நல்லது.



எந்தெந்த இடங்களில் தங்கினீர்கள்?

முதலில் Mawphalang என்கிற இடத்தில் உள்ள  Maple pine Farm house என்கிற இடத்தில் இரு நாள் தங்கினோம்.



பின் Mawphanlur ; அதன் பின் Mawlynnong .. இரு இடங்களிலும் கெஸ்ட் ஹவுஸ்கள் - பின் சிரபுஞ்சியில் சாய் மிக்கா ரிசார்ட் - இங்கு இரு நாள்; இறுதியாக ஷில்லாங்.. இங்கு Orchid Lake resort என்ற இடத்தில் தங்கினோம்.

நாங்கள் சுற்றி பார்த்த இடங்கள் தந்த மகிழ்ச்சி தவிர - வெவ்வேறு  இடங்கள் ஒவ்வொன்றும் அற்புத அனுபவத்தை தந்தது. சில இடங்கள் சுற்றி பார்த்த போது ஏமாற்றம் தந்த போதும் அதனை சரி செய்யும் விதத்தில் ஒவ்வொரு இடமும் இதமாக இருந்தது... மிக மிக ரசிக்கும் விதத்திலும்....



உணவு??

வெஜ் மற்றும் நான் வெஜ் இரண்டு வகை உணவுகளும் கிடைக்கின்றன. சாதம் .. சென்னை அரிசிக்கு கிட்ட தட்ட மேட்ச் செய்யும் விதத்தில் உள்ளது. 2 அல்லது 3 வகை காய்கள் (உருளை  கிழங்கு  நிச்சயம் உண்டு.. அங்கு விளைகிறதே !!) - சிக்கன் போன்றவை வழக்கமாய் கிடைக்கும் உணவுகள்...

சிரபுஞ்சியில் ஆரஞ்ச் ரூட் என்கிற ஹோட்டல் உள்ளது. இங்கு இட்லி, தோசை போன்றவை கிடைக்கின்றன.



இதனை நடத்தும் உரிமையாளர் தமிழர். வங்கியில் VRS வாங்கி விட்டு - பின் இங்கு வந்து சேரா ஹொலிடே ரிசார்ட் எனும் தங்குமிடம் துவங்கினார்.  இது சிரபுஞ்சியின் முதல் ஹோட்டல் !! இன்றும் மிக சிறப்பான நம்பர் ஒன் ஹோட்டலாக இது திகழ்கிறது. சமீபத்தில் துவங்கப்பட்ட இந்த ஹோட்டலும் மிக நன்று. இங்கு செல்லும் போது டிபன் வகைகள் மட்டும் சுவையுங்கள். அரிசி உணவு விலை அதிகம். அந்த அளவு நன்றாக இல்லை.

%%%%%%%%%%%%%%%



அங்கு வேற்று மொழி சமாளிப்பது எப்படி ?

ஆங்கிலம் டிரைவர்கள் பெரும்பாலும் பேசுகிறார்கள். ஹிந்தி பலருக்கும் தெரிவதில்லை !!



ஆங்கிலம் நன்கு தெரிந்த டிரைவர் வைத்து கொள்வது மிக முக்கியம். மேலும் சில இடங்களில் Guide அவசியம் வைத்திருக்க வேண்டும்.


கைட் உதவி தினம் தேவையா ?

தினம் தேவை இல்லை. மவுலான்க்ப்னா போன்ற ஓரிரு இடங்கள் மற்றும் டபிள் டெக்கர் பாலம் செல்லும் போது கைட் உதவி தேவைப்படும். மற்ற நேரம் டிரைவர்கள் உதவியில் சமாளிக்கலாம்

வட கிழக்கு மாநிலங்கள் பாதுகாப்பானவையா?

இந்த கேள்வி பல நண்பர்கள் கேட்டனர். மற்ற மாநிலங்கள் பற்றி தெரியாது. ஆனால் மேகலாயா மிக பாது காப்பாகவே இருந்தது. எனக்கு மட்டுமல்ல, இதற்கு முன் சென்று வந்த நண்பர்கள் சொன்னதும் அதுவே.

மேகாலயாவில் உள்ளூர் பயணம் எப்படி ?

பஸ் போன்றவை அதிகம் இல்லை. கார் எடுத்து கொள்வதே நலம்,. 1700 முதல் 3000 வரை காரின் தன்மை மற்றும் தூரம் பொறுத்து ஒரு நாளைக்கான கார் செலவு இருக்கும்

மொத்த செலவு ?

ஒரு நபருக்கு - ஒரு வாரத்திற்கு 20,000 முதல் 30,000 வரை செலவாகும் (பயணம், தங்கும் இடம் அனைத்தும் சேர்த்து)

எந்த நேரத்தில் பயணிப்பது சிறந்தது ?

ஏப்ரல், மே மிக நன்று. ஜூன், ஜூலை கூட அருவிகளில் நிறைய தண்ணீர் வரும் என்பதால் நன்றாக இருக்கும் என்றனர். ஆகஸ்ட், செப்டம்பர், அக்டோபர் - மழை அதிகம் என்பதால் தவிர்க்கலாம். டிசம்பர், ஜனவரி குளிர் அதிகம்.. 5 டிகிரி போல் இருக்கும்... அதனை என்ஜாய் செய்ய நினைப்போர் அப்போது பயணிக்கலாம்.

மேகாலயாவில் அவசியம் காண வேண்டியவை ?

அதிக கூட்டம் இன்றி ஒரு குளிர் பிரதேசம் என்பதே மிக பெரிய சந்தோஷமான விஷயம். மேலும் குகைகள், அருவிகள், ரூட் பிரிட்ஜ்கள் என ரசிக்க ஏராள விஷயங்கள் உண்டு. !!













3 comments:

  1. அருமையான பயணம் நண்பரே

    ReplyDelete
  2. சமீபத்தில் நானும் சில நண்பர்களும் வடகிழக்கு மாநிலங்கள் சென்று வந்தோம். Orange Root-ல் தான் இரண்டு வேளை சாப்பிட்டோம். சிறப்பான இடம் தான் மேகலாயா. தற்போது நிறைய சுற்றுலா பயணிகள் அங்கே வருவதை பார்க்க முடிந்தது.

    உங்கள் அனுபவங்கள் பற்றி தெரிந்து கொள்ள காத்திருக்கிறேன். எனது பயண அனுபவங்கள் எழுத சில நாட்களாகலாம்! :)

    ReplyDelete
  3. Anonymous11:41:00 AM

    மேகாலயா சுற்றுப்பயணம் பற்றிய பதிவு நன்றாக இருந்தது. இன்னும் நிறைய எழுதியிருக்கலாம். இடங்கள், அருவிகள் பற்றி இன்னும் விபரம் கிடைத்திருக்கும். தொடர்ந்து வடகிழக்குப் பற்றி சுவாரஸ்யமான தகவல்கள் எழுதுங்கள். -ஏகாந்தன் http://aekaanthan.wordpress.com

    ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...