Friday, January 15, 2016

ரஜினி முருகன் - நம்பி போங்க- சந்தோஷமா வாங்க : விமர்சனம்

ந்தேகமே வேண்டாம்..வருத்தபடாத வாலிபர் சங்கம் - இரண்டாம் பாகம்  தான்.. கிராமத்து பின்னணி.. சிவா- சூரி காம்போ; தாவணியில் மின்னும் ஹீரோயின்; காமெடி; குடும்பத்து உறவுகளை முக்கியபடுத்தும் திரைக்கதை.. என ஏராள ஒற்றுமைகள்.. "நம்பி வாங்க.. சந்தோஷமா போங்க" என்று விளம்பரம் செய்தார்கள்  .. அது நடந்ததா?



கதை

வேலை இல்லாத ஹீரோ - டீ  கடை - ரியல் எஸ்டேட் என என்னவோ செய்து பார்க்கிறார்- ஒன்றும் செட் ஆகாததால் - தாத்தா ராஜ் கிரணின் பல கோடி சொத்தை விற்று - அதில் கிடைக்கும் பங்கில் - ஒரு பிசினெஸ் செய்ய நினைக்கிறார்; அதை தடுக்க வரும் உள்ளூர் வில்லன் சமுத்திர கனி - சிவா சொத்தை விற்றாரா?  தாத்தாவின் பேரன் என்று சொல்லும் சமுத்திர கனியின் பொய்யை நிரூபித்தாரா என்பது கலகல பிற்பகுதி..

இயக்குனர் பொன் ராம்

பொன் ராம் - ஜனரஞ்சன இயக்குனராக கலக்குகிறார்.  மக்களின் பல்ஸ் உணர்ந்து -  எங்கு சிரிப்பார்கள் - எப்படி ரசிப்பார்கள் என்று பக்காவாக காட்சிகள் அமைக்கிறார். தாரை தப்பட்டை பார்த்து விட்டு - உடன் பார்த்ததால் - மனைவி- மகள் இருவரும் - "இது மாதிரி படமே போதுங்க; எவ்ளோ நல்லாருக்கு !" என்று ரிலீப் ஆனார்கள்

சிவகார்த்திகேயன்

மனிதரின் சக்சஸ் வீதம் வியக்க வைக்கிறது. ஓரிரு படம் தவிர - இவர் நடித்த அனேக படங்கள் ஹிட்- ஒரே காரணம் - இவரது ஹியூமர் சென்ஸ் மற்றும் நகைச்சுவை கலந்த ஸ்க்ரிப்ட் மட்டும் தேர்ந்தெடுக்கும் புத்தி சாலித்தனம் ; சிவா படம் நிச்சயம் குடும்பமாக சென்று பார்க்கலாம்- ஏமாற்ற மாட்டார் என்ற நம்பிக்கையை கொடுத்து விட்டார். தியேட்டர்களில் குடும்பங்கள் கூட்டம் தான் அள்ளுகிறது ! புக்கிங் கூட முதலில் காலியானது இப்படத்துக்கு தான் !

சூரி

சிறு இடைவெளிக்கு பின் மீண்டும் பார்முக்கு வந்துள்ளார் சூரி; சூரி ப்ராண்ட் காமெடி தான்; அடிக்கடி பண வசூல் வேட்டை நடத்தும் அவரது தந்தை கேரக்டர் செம கல கல ! அவருக்கு உதவும் சிவா & சூரி திருடுவதும், மாட்டுவதும் - அப்போது பேசும் டயலாக்கும் தியேட்டர் அதிருகிறது..

கீர்த்தி சுரேஷ்

வாவ் !! பொன் ராம் - இரண்டாம் முறையாய் அழகான ​+ நடிக்க தெரிந்த ஹீரோயின்  அறிமுகம் செய்துள்ளார் (இது தான் முதல் படம்.. ரிலீஸ் தாமதம் காரணமாக - இன்னொரு படம் ரிலீஸ் ஆகி பெட்டிக்குள் போனது !)



அம்மணி செம அழகு;எக்ஸ்பிரஷன் ஸ்ரீ திவ்யாவை விட கியூட் !  தாவணி- புடவை- கோட் - சூட்- சுடிதார் என அனைத்துமே பொருந்துகிறது. அடுத்து விஜய் - அஜீத் படங்கள் என்று ட்ராவல் ஆகிவிடுவார் என நினைக்கிறன்

 இந்த படத்தில் அவருக்கு சற்று தெளிவில்லாத பாத்திரம்..ஹீரோவை லவ் செய்கிறாரா இல்லையா என்பதில் செம குழப்பம். கேரக்டர் தெளிவாய் இருந்தால் ஸ்ரீ திவ்யா போலவே நம் மனதில் முழுசாய் நிறைந்திருப்பார்..

சமுத்திர கனி

அண்மையாய் மிக நல்லவன் பாத்திரங்கள் மட்டுமே செய்யும் சமுத்திர கனி - ஏழரை மூக்கன் எனும் மிக மோசமான வில்லன் பாத்திரம்.. மனுஷன் செம அருமையான நடிப்பு..

பிற பாத்திரங்கள்

ராஜ்கிரண்.. படத்தின் பின்புலமாய் - முதுகெலும்பாய் இருக்கிறார். முக்கிய திருப்பங்கள் இவர் பாத்திரம் மூலம் தான் வருகிறது.. நடிப்புக்கும் அதிக ஸ்கோப் இவருக்கு தான். மனுஷரை பற்றி சொல்லணுமா ? Very apt !

ஹீரோயின் தந்தை - ரஜினி ரசிகராய் வருபர் பாத்திரம் மற்றும் நடிப்பும் நைஸ் !

மியூசிக்

இமான் பாடல்கள் ஏற்கனவே பட்டையை கிளப்பி கொண்டிருக்கின்றன. "என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா", " " உன் மேலே ஒரு கண்ணு "  - இவை குறிப்பிட்டு சொல்ல வேண்டியவை..

நெகடிவ்

உண்மையில் பெரிதாய் நெகடிவ் அதிகம் இல்லை; அதிக ரிஸ்க் இல்லாத - ஏற்கனவே பார்த்த மாதிரி கதை- என்பது - நெகடிவ் என்றாலும் சிவா- சூரி காம்போ மீண்டும் வொர்க் அவுட் ஆகிறது..

கடைசியாக  -கோவில்  விழாவில் பாடும் பாட்டு நிச்சயம் ஸ்பீட் ப்ரேக்கர்; அதனை தூக்கியிருக்கலாம் !

பைனல் அனலிசிஸ்

கொஞ்ச நாளுக்கு பிறகு - குடும்பத்தோடு ஜாலியாக பார்க்க ஏற்ற படம் - பைசா வசூல் !
*********
அண்மை பதிவு:தாரை தப்பட்டை - விமர்சனம் 

1 comment:

  1. சனி, ஞாயிறு எந்த படம் செல்லலாம் என எண்ணி இருந்தேன். உதவிக்கு நன்றி.

    ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...