Sunday, May 15, 2016

பென்சில் - சினிமா விமர்சனம்

கதை 

பள்ளி வகுப்பறையில் ஒரு மரணம் ! யார் கொன்றார்கள் என்று துப்பறிவதே கதை


திரைக்கதை 

ஒன் லைனராக நன்றாக உள்ள கதை - திரைக் கதையாக்கத்தில் சற்று சுணங்கி போய் விட்டது. அறிமுக இயக்குனர் திரைக்கதைக்கு - தன்னை விடுத்து அனுபவம் கொண்ட ஒரு டீமை நம்பியிருக்கலாம்.

முதல் காட்சியிலேயே அதிர்ச்சிக்குள்ளாக்கி கதையை ஆரம்பிப்பதும், த்ரில்லர் பாணியில் கதை பயணிப்பதும் சுவாரஸ்யம் எனினும், கதை முழுதும் விரவி கிடக்கும் லாஜிக் மிஸ்டேக் கள் தான் - ஸ்பீட் ப்ரேக்கர் !! அதிலும் பள்ளி மாணவர்களே சில மணி நேரங்களில் துப்பறிந்து முடிப்பதெல்லாம் காதுல பூ ரகம்

நடிப்பு 

வில்லனாக வரும் கெட்ட பையன் நடிப்பில் ஏராள வெறுப்பை சம்பாதித்து கொள்கிறான். அந்த பாத்திரத்துக்கு அது தான் வெற்றி..

GV பிரகாஷ் குமார்  ஹீரோவாக அறிமுகமாக வேண்டிய படம்... அவரது நல்ல நேரம் வேறு சில படங்கள் வெளி வந்து வெற்றி கரமாகவும் ஓடி விட்டன..



பள்ளி மாணவன் பாத்திரத்துக்கு கச்சிதமாக பொருந்துகிறார். திரைக்கதையின் பலவீனம் அவர் பாத்திரத்தை வீக் ஆக்குகிறது

ஸ்ரீ திவ்யா.. அழகு.. ! சின்ன பெண்ணாக தெரிகிறார். நிறைய புத்தகம் படிப்பவர் என காட்ட, அவ்வப்போது கண்ணாடி மாட்டி காட்டுவதை தவிர்த்திருக்கலாம் (கண்ணாடியுடன் நிச்சயம் ரசிக்க முடியவில்லை)



எப்போதும் அர்ஜென்ட் ஆக ஒன் பாத் ரூம் போகும் நண்பன் பாத்திரமும், அவ்வப்போது அவன் பேசும் டயாலாக்கும் கியூட்.

ப்ரின்சிபால் கஜெந்திர குமார், ஊர்வசி பகுதி ரசிக்க வைக்காமல் எரிச்சல் வரவே வைக்கிறது.

இசை இன்ன பிற 

GV பிரகாஷ் குமார் - தான் நடிக்கும் படங்களில்  பாடல்கள் அட்டகாசமாய் தருவார். இம்முறை அதற்கும் விதி விலக்கு.

படத்தில் கேப்டன் விஜய்காந்தை  மறை முகமாக தாக்கியிருக்கிறார்கள். வில்லன் ஆக நடிக்கும் பள்ளி மாணவன் விஜய் காந்த் மகன் என்பது போல் காட்டுகிறார்கள் (ஹீரோ பேர் விஷி காந்த் என்கிறார்கள்; உங்க அப்பா டயலாக் என சொல்லி விட்டு விஜய் காந்த் குரல் + மாடுலேஷனில் டயலாக் பேசுகிறான் ஒரு மாணவன் !) விஜய் காந்த் மேல் இயக்குனருக்கு என்ன காண்டோ??

முதன் முறையாய் ஒரு நடிகராய் தோல்வி படத்தை சந்திக்கிறார் GV பிரகாஷ் குமார்

சுத்த மோசம் என்றோ, பார்க்கவே முடியாது என்றோ நிராகரிக்க முடியாது.

த்ரில்லர் விரும்புவோர், நேரம் இருக்கு, படம் பார்க்கணும் என்போர் - ஒரு முறை பார்க்கலாம் !

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...