Tuesday, May 2, 2017

வானவில்: பாகுபலி சர்ச்சை- ஞாபகமறதி கணவர்கள் குறித்த நீயா நானா

பார்த்த படம்: Parched (ஹிந்தி)

அஜய் தேவ்கான் தயாரிப்பில் வெளியான இப்படம் ஏராள தேசிய விருதுகளை வென்றது; நாங்கள் படம் பார்க்க இதுவே காரணம்

ஒரு கட்டு பெட்டியான, மூட நம்பிக்கைகள் நிறைந்த கிராமம் .. மிகுந்த போராட்டத்திற்கு பின் தான் மொபைல் அனுமதிக்கப்படுகிறது; இன்னும் டிவி க்கு அனுமதி இல்லை; இந்த கிராமத்தில் இருக்கும் 4 பெண்களின் கதை தான்   Parched.

Image result for parched

நால்வரில் மூவர் தோழிகள். நான்காவது ஒரு சிறு வயதில் மணமுடிக்கும் ஒரு இளம்பெண்;திரைக்கதை முழுதும் இந்த பெண்களை - ஆண்கள் எப்படி பயன்படுத்துகின்றனர் - உதாசீனப்படுத்துகின்றனர் - வன்முறையை உபயோகிக்கின்றனர் என்றே பயணிக்கிறது.. இவற்றில் இருந்து அவர்கள்  எப்படி தீர்வு காண்கிறார்கள் என முடிகிறது படம்

ஜாலியாய் ஒரு படம் பார்ப்போம் என்போர் தவிர்க்க வேண்டிய படம்; போலவே குடும்பத்துடன்/ குழந்தைகளுடன் பார்க்கவும் ஏற்றதல்ல.

நல்ல சினிமா - ஆர்ட் பிலிமில் ஆர்வமுள்ளளோர் மட்டும் தனியே கணினியில் அல்லது டிவியில் காணலாம் !

பிட்னெஸ் பக்கம் 

அண்மையில் கலந்து கொண்ட ஒரு சுவாரஸ்ய போட்டி - நங்கநல்லூர் பண்டிட் ரன்னர்ஸ் நடத்திய "டெம்பிள் ரன்".

மூன்று பேர் கொண்டது ஒரு அணி; இந்த மூவர் அணி 20 கோயில்களை சென்றடைந்து விட்டு புறப்பட்ட இடம் வரவேண்டும். அனைவரும் 20 கோயிலுக்கும் செல்ல அவசியமில்லை; ஒருவர் 6 கோவிலும் மற்ற இருவர் ஆளுக்கு 7 கோவிலும் சென்றால் கூட போதும்.

போட்டிக்கு முதல் நாள் 20 கோவில்கள் லிஸ்ட் தரப்பட - ஒவ்வொரு அணியும் நங்கநல்லூரை அலசி ஆராய்ந்தது.

போட்டியன்று 20 அணிகள் கலந்து கொண்டன. அதில் 6 அணிகள் மட்டுமே நிர்ணயிக்கப்பட்ட 45 நிமிடத்திற்குள் 20 கோவிலை தொட்டு வந்தன (அதில் எங்கள் அணியும் உண்டாக்கும் !) வெற்றி பெற்ற அணி 27 நிமிடத்திற்குள் அனைத்து கோவிலையும் தொட்டு ஆச்சரியத்தில் ஆழ்த்தியது

அருமையான வீட்டில் தயாரிக்கப்பட்ட ஹெல்தி ஸ்நாக்ஸ், அனைவருக்கும் மரக்கன்று என தந்து ஆச்சரியத்தில் ஆழ்த்தி விட்டனர் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள்.. !

Image may contain: outdoor
Photo courtesy: Shumon Singha 

இந்த நங்கநல்லூர் ரன்னர்ஸ் தினம் நங்கநல்லூர் சுதந்திர தின பூங்காவில் இருந்து தான் ஓடுகின்றனர். நீங்கள் அந்த ஏரியா வாசி எனில் இவர்களுடன் இணையலாம்.. !

இவர்களின் முகநூல் பக்கம் : https://www.facebook.com/groups/181620802198310/

ஐ பி எல் கார்னர் 

வழக்கமாய் கடைசி நேரம் வரை எந்த அணிகள் Play off  உள்ளே வரும் என்பது தெரியாமல் இருக்கும். இம்முறை கொல்கத்தா, மும்பை மற்றும் ஹைதராபாத் Play off செல்வது அநேகமாய் உறுதியாகி விட்டது. போலவே பெங்களூரு, டில்லி மற்றும் குஜராத் Play off உள்ளே செல்ல வாய்ப்பே இல்லை என்பதும் நிச்சயம். Play off உள்ளே செல்லும் நான்காவது அணி புனேவா அல்லது பஞ்சாபா என்பது மட்டும் தான் முடிவாக வேண்டும். (புனேவிற்கு வாய்ப்புகள் அதிகம்)

இளம் வீரர்களில் மும்பைக்கு ஆடும் ராணா மற்றும் டில்லி வீரர் ரிஷாப் பாண்ட் இந்திய அணிக்கு விளையாட பிரகாச வாய்ப்பு இருக்கிறது; குறிப்பாக இவ்வருடத்தில் மிக சிறந்த கண்டுபிடிப்பு ராணா.

பவுலிங்கில் எத்தனையோ வெளி நாட்டு வீரர்கள் இருந்தாலும் புவனேஷ்வர் குமார் மற்றும் பும்ரா தான் அசத்தி வருகிறார்கள்;  இவர்களுடன் ஷாமியும் சேர்ந்து விட்டால் இந்திய அணியின் பவுலிங் ஒரு நாள் மற்றும் 20-20 ல் வலுப்பெறும் என்ற நம்பிக்கையை தருகிறது

இம்முறை கோப்பை வெல்வது கொல்கத்தா அல்லது ஹைதராபாதாக இருக்கலாம் என எண்ணுகிறேன்.

என்னா பாட்டுடே :என்னுள்ளே என்னுள்ளே (வள்ளி)

வள்ளி படத்தில் இடம் பெற்ற இப்பாட்டு ராஜாவின் மேதைமைக்கு ஒரு அட்டகாச எடுத்து காட்டு.

படத்தில் ஒரு ஏடாகூட காட்சியில் - பாடல் சற்று கிளாமராக வரும் என்பதால் - ஆடியோ வடிவத்தை மட்டும் இங்கு ஷேர் செய்கிறேன்

மெட்டு, வாத்திய கோர்வை, சுவர்ண லதாவின் குரல் அனைத்தும் சேர்த்து பாடலை வேற லெவலுக்கு எடுத்து போகிறது

சரணத்தில் மெட்டு அங்கும் இங்கும் அலை பாய்வதும், ஸ்வர்ண லதாவின் மயக்கும் குரலும்..வாவ் !!



பாகுபலி சர்ச்சை 

பாகுபலி குறித்து 90 % பாசிட்டிவ் விமர்சனங்கள் வந்தாலும் 10 % பேர் அதனை எதிர்த்து எழுதுகிறார்கள். இதில் தவறில்லை; எந்த  படைப்பும் விமர்சனத்துக்கு அப்பாற்பட்டது அல்ல. ஆனால் பாகுபலியை ஆதரிப்போரை நக்கல் அடிப்பதும், பாகுபலியை ஒன்றுமே இல்லாத குப்பை என ஏசுவதும் தான் உறுத்துகிறது.

சிலருக்கு ஒருவரை பிடிக்க வில்லை என்றால் அவர் என்ன செய்தாலும் பிடிக்காது. எப்படி குறை கண்டு பிடிக்கலாம் என்று தான் அலைவர்.. பாகுபலி விஷயத்திலும் இது நடக்கிறது; முதல் பாகம் வந்தபோதே - அது மாபெரும் வெற்றி கண்டபின்னும் -50 நாள் கழித்து பாகுபலியை விமர்சித்து எழுதியோர் இருந்தனர். அதே நபர்கள் மீண்டும் இப்போது முதல் நாளே பார்த்து விட்டு மீண்டும் விஷம் கக்குவதை பார்த்து சிரிக்கத்தான் வேண்டியுள்ளது

பாகுபலியில் லாஜிக் குறை பேசுகிறார்கள். எத்தனை ஹாலிவுட் சினிமாவில் லாஜிக் பார்த்துள்ளோம்.. அங்கெல்லாம் செய்தால் வாயை மூடி கொள்வோம். உள்ளூரில் ஹாலிவுட் தரத்தில் ஒரு படம் தந்தால் முதல் ஆளாய் கல் எறிவோம்

பாகுபலியில் குறைகள் இல்லாமல் இல்லை;ஆனால் அவற்றை விட நிறைகள் அதிகம். பாகுபலியை ஆதரிப்போர் பார்ப்பது நிறைகளை; விமர்சிப்போர் குறைகளை மட்டுமே காண்கின்றனர்

சரி ..சர்ச்சைகள் ஒரு பக்கம் இருக்கட்டும் ஜாலியாக இந்த பாகுபலி மீம்ஸ் கண்டு சிரியுங்கள் !

போஸ்ட்டர் கார்னர் - பாகுபலி ஸ்பெஷல் 

Why Kattappaa killed Bahubali - Funny reason 







நீயா நானா -  ஞாபகமறதி கணவர்கள் 

ஞாபக மறதி கணவர்கள் பற்றி மனைவிகள் பேசிய நீயா நானா - எனக்கு மகிழ்ச்சியை தந்தது; வீட்டம்மாவை "அவசியம் பாரு" என  உட்கார வைத்தேன். நான் ஒன்றும் ஞாபக மறதி ஆசாமி கிடையாது; வீட்டில் பத்து பொருள் சொன்னாலும் சரி, ஒன்றே ஒன்று சொன்னாலும் சரி எவ்வளவு வேலை/ எந்த முக்கிய மீட்டிங் முடிந்து திரும்பினாலும் நினைவோடு வாங்கி வருகிற ஆள் தான். இருந்தும் வீட்டில் திட்டு என்ன குறைவாகவா கிடைக்கிறது !!

அதற்கு தான் அம்மணியை அமர்ந்து பார்க்க சொன்னேன்...பிறந்த நாள், கல்யாண நாளை  மறப்பது, வீட்டில் சின்ன வேலை சொன்னாலும் மறந்து விட்டு செய்யாமல் போவது என ஒவ்வொன்றாய் சொல்ல சொல்ல - நம்ம மேடம் " நீங்க எவ்வளவோ பரவாயில்லை" என சர்டிபிகேட் கொடுத்து விட்டார்.

டிவியில் வழக்கம் போல கோபிநாத் " அவரு மறக்கும்போது உங்க மனநிலை எப்படி இருக்கும்? உங்களுக்கு அது எவ்வளவு கஷ்டமா இருக்கும் " என குடும்பத்திற்குள் குண்டு வைத்து கொண்டிருந்தார்... !

4 comments:

  1. சுவாரஸ்யமாகப் பொழுது போக்குகிறீர்கள். உபயோகமாகவும்.

    ReplyDelete
  2. நீங்கள் உங்கள் தினப்படிச்
    செயல்களை மிகவும் வரைமுறைப்படுத்தி
    மிகச் சிறப்பாகக் கொண்டு செல்வதை
    தங்கள் பதிவு பறைசாற்றுகிறது

    அருமையான பல்சுவைப் பதிவு

    பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
  3. நன்றி ஸ்ரீராம்

    நன்றி ரமணி சார்

    ரகு: கல்யாணம் ஆனபின் இந்த மாதிரி ஜோக்குகள் -இப்போது அனுபவ பூர்வமாய் புரியக்கூடும் :)

    ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...